செய்திகள் :

’தவெக அரசின் குளறுபடிகளால் நீதித்துறை ஸ்தம்பித்துள்ளது!’ – அதிமுக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

post image

புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக கோவையை சேர்ந்த அ.தி.மு.க வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “த.வெ.க. அரசினால் நீதித்துறையின் நிர்வாக செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இது இதுவரை இந்திய நீதித்துறை வரலாற்றில் நடக்காத விஷயம். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ஆளுங்கட்சி சார்ந்த வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கம்தான். அதற்கான முழு உரிமையும் அரசிற்கு உள்ளது.  

அதேசமயம் கடந்த காலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது புதிய அரசு வழக்கறிஞர் பதவியேற்கும் வரை, பழைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு கால நீட்டிப்பு வழங்குவது வழக்கம். கடந்த தி.மு.க. ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க 6 மாதகாலமானது. அதுவரை அ.தி.மு.க-வை சேர்ந்த அரசு வழக்கறிஞர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால் த.வெ.க. அரசு கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு கால நீட்டிப்பும் வழங்கவில்லை, அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்யவில்லை.

கோபால கிருஷ்ணன்
கோபால கிருஷ்ணன்

இதனால் அரசு வழக்கறிஞர்களே இல்லாமல் நீதிமன்றம் நடக்கிறது. அரசாங்கம் என்பது யார் இருந்தாலும் இல்லையென்றாலும் இயங்க வேண்டும். அரசு வழக்கறிஞர் என்பது நீதிமன்றத்தின் உயிர்நாடி. ஆனால் அரசு வழக்கறிஞர்கள் இல்லாததால் பிணை வழங்குதல், வழக்கு நடத்துதல் போன்ற நீதிமன்ற பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நீதித்துறை ஸ்தம்பித்துள்ளது.

புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் குளறுபடிகள் நடந்துள்ளன. புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுகான நியமன ஆணை இன்னும் வந்து சேரவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து போன் மூலம் 24 வழக்கறிஞர்களை நியமித்து இருப்பதாகவும், அவர்களை பதவியேற்குமாறும் கூறியுள்ளனர். இதில் வழக்கமான நடைமுறைகள் எதுவும் பின்பற்றவில்லை. பணி நியமன ஆணை இல்லாமல் அரசு வழக்கறிஞர்கள் ஆஜரானது இல்லை. இதனை மீறி பணி நியமன ஆணை இல்லாமல் அரசு வழக்கறிஞர்களாக பதவியேற்பது சட்டவிரோதம். இது தொடர்பாக மாவட்ட நீதிபதியை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம்” என்றார்.

த.வெ.க. MLA-க்கள் பேர விவகாரம்: செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆஜராகவில்லை! - FIRல் அதிர்ச்சி தகவல்?

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அரசைக் கவிழ்க்க முயற்சித்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகவில... மேலும் பார்க்க

'ஏவுகணைகளை தாருங்கள்; கிடங்குகளில் இருப்பதால் பயன் இல்லை' - உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி கோரிக்கை

ரஷ்யா, உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இன்று (ஜூலை 6, 2026) காலை ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி, அந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்திரு... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்! - விரைவில் டெண்டர்

தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 2,000 மின்சார ஏசி பேருந்துகளை வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இ... மேலும் பார்க்க

'இந்தியாவில் இஸ்ரேலுக்கு எவ்வளவு பிரமாண்ட ஆதரவு இருக்கிறது தெரியுமா?' - நெதன்யாகு என்ன சொல்கிறார்?

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், 'இஸ்ரேலுக்கு அமெரிக்காவை தவிர சக்தி வாய்ந்த கூட்டாளி யாரும் இல்லை' என்று பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, Fox... மேலும் பார்க்க