செய்திகள் :

`தவெக ஆட்சிக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ?' - சட்டம் ஒழுங்கு குறித்து டிடிவி தினகரன்

post image

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அமுமுக தலைவர் டிடிவி தினகரன் தெரித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு - பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பதில் திமுகவைப் போல தவெகவும் தோல்வியடையக் கூடாது.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே பகுதிநேர கானா பாடல் பாடும் தொழிலில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் வெட்டிக் கொலை, தூத்துக்குடி அருகே மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் கொலை, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கொலை, சேலம் அருகே மதுபோதையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் அடித்துக் கொலை என புதிய அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக அரங்கேறும் கொலைகளின் எண்ணிக்கை பொதுமக்களின் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.

திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருந்ததே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது. எனவே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது தான் அரசு நிர்வாகத்தின் முதன் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும் அதன் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்."

‘இதுதான் உங்களது நாகரிக அரசியலா ஜோசப் விஜய்?’ – வானதி சீனிவாசன் சாடல்!

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டுகூட தெரிவி... மேலும் பார்க்க

'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா?' - நெதர்லாந்து பிரதமருக்கு இந்தியா தக்க பதில்

இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி என ஐந்து நாடுகள் பயணத்தை மே 15 முதல் மே 20 வரை மேற்கொண்டிருக்கிறார். மோடி நெதர்லாந்து செல்வதற்கு முன்பு, அவரது பயணம் குறி... மேலும் பார்க்க

`இந்திய ரூபாய்-ன் வீழ்ச்சியை அரசு கண்டும் காணாமலும் இருப்பது இதனால்தான்' - நிபுணர் சொல்வதென்ன?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. தற்போது சந்தையில் ஒரு டாலருக்கு ரூ.96-ஐ தாண்டி வர்த்தகம் ஆகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், வ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடல் - நிம்மதியடைந்த பொதுமக்கள்!

தமிழக அரசு, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட உள்ளன.அவற்றுள் மிகவும் கவனம் ப... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி வெளியேறியிருக்கலாம்!’ - திமுக - காங்கிரஸ் முறிவு குறித்து நாராயணசாமி

``தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்...!’புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று 17-ம் தேதி தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கும்... மேலும் பார்க்க

“ஆரவாரத்தால் அதிர போகும் சேப்பாக்கம்.!” - தோனியின் `Last' என்ட்ரியை காண வரும் முதல்வர் விஜய்?

சேப்பாகத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சேப்பாக்கம் மைதானமே கூடுதல் உற்சாகமாக இருக்கப்போகிறது.இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்க... மேலும் பார்க்க