செய்திகள் :

'தவெக ஆட்சியில் மக்கள் நொந்து போயிருக்கின்றனர்!' - மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா கடும் தாக்கு!

post image

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா தவெக அரசை 'ரீல் அரசு' என விமர்சித்து பேசியிருந்தார்.

சென்னை மாமன்ற கூட்டத்தின் அவையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இப்போதைய முதல்வர் விஜய் என இருவரின் படமுமே மாட்டப்பட்டிருந்தது. சரியாக காலை 10 மணிக்கு மாமன்ற கூட்டம் தொடங்கியது.

இரங்கல் தீர்மானம் முடிந்த பிறகு பேசிய மேயர் பிரியா, 'திமுக கொண்டு வந்த திட்டங்களைத்தான் தற்போதைய அரசு செயல்படுத்தி வருகிறது.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தமிழக பொருளாதார வலிமை குறித்து பேசியதுதான் திமுகவுக்கான வெற்றி.

நாம் கொண்டு வந்த திட்டங்களை பெயரை மாற்றியாவது செயல்படுத்தினால் மட்டுமே இப்போதைய அரசால் இயங்கவே முடியும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 22 தொகுதிகளில் 20 தொகுதிகளை திமுக கூட்டணி இழந்திருக்கிறது. ஆனால், இப்போது மக்கள் இவர்களுக்கு ஏன் வாக்களித்தோம் என நொந்து கொண்டிருக்கின்றனர்.

ரீல் ஆட்சிக்காக ரியல் ஆட்சியை விட்டு விட்டோம் என வருந்துகின்றனர். திமுக கவுன்சிலர்கள் மக்களுக்காக எப்போதும் போல அயராமல் உழைக்க வேண்டும்' என்றார்.

மேயர் பிரியா

திமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் மட்டும் அதிகாரிகளை வேண்டுமென்றே பணிமாற்றம் செய்கின்றனர் என திமுக கவுன்சிலர் ஆறுமுகம் குற்றஞ்சாட்டினார்.

அதுகுறித்து துணை மேயர் மகேஷூம், 'அரசு கட்சி பாரபட்சம் பார்க்காமல் மூன்றாண்டுகளுக்கு மேல் பணி செய்யும் அதிகாரிகளை மாற்ற வேண்டும்' என ஆணையர் சமீரனிடம் கேட்டுக் கொண்டார்.

ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு!

போர் நிறுத்தத்தில் ஈரானுக்கு இருக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது ஆகும். இது ஸ்விட்சர்லாந்தில் நடந்து வரும் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த... மேலும் பார்க்க

"காவல்துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால்.!" - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

"காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது" என்று தவெக அரசை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வ... மேலும் பார்க்க

விமர்சித்த அதிமுக கவுன்சிலர்; அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்கள்! - மாநகராட்சி கூட்டத்தில் கடமுடா!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தின் போது அதிமுகவின் கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் திமுகவினரை விமர்சனம் வைக்க, வாக்குவாதம் முற்றி திமுகவினர் சதீஷை ... மேலும் பார்க்க

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேர... மேலும் பார்க்க

புதுச்சேரி: ரூ.1,000 கோடியில் உறுப்பு மாற்று, விமான ஆம்புலன்ஸ் மருத்துவமனை! - ஜிப்மர் அறிவிப்பு

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, சுகாதாரம் மற்றும் கல்வி வசதியை உருவாக்குவதற்காக, சுமார் 50 ஏக்கர் நிலத்தை ஜிப்மர் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது மாநில அரசு. அதையடுத்... மேலும் பார்க்க

"பொருளாதார மந்த நிலையை விட அணு ஆயுதம் மிகப்பெரிய பேரழிவு" - ஈரான் போர் குறித்து ட்ரம்ப்

நேற்று வெள்ளை மாளிகையில் ஈரான் போர் குறித்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்தப் பேட்டியில், "அவர்கள் நம்மை மதிக்கும் வரை நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. ... மேலும் பார்க்க