செய்திகள் :

`தாமிரபரணி மணல் கொள்ளையை எதிர்த்து போராடி வென்றவர் நல்லகண்ணு ஐயா' - ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள் கண்ணீர்

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. வயது மூப்பு காரணமாக நேற்று (24-ம் தேதி) உயிரிழந்தார். அவரது சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம். அவரது மறைவையொட்டி அவர் கல்வி பயின்ற குமரகுருபரர் தொடக்கப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்த இரண்டு பள்ளிகளுக்கும், குமரகுருபரர் கல்லூரிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

மாணவர்கள் அஞ்சலி

``தனது 18வது வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டவர். 1940களில் நடந்த நெல்லை சதி வழக்கில் சேர்க்கப்பட்டு 7 ஆண்டுகள் வரை சிறையில் இருந்தார். அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால், நிலமற்ற ஏழை விவசாயிகளின் கூலி உயர்வுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர். ஸ்ரீவைகுண்டம் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கு விவசாயிகளின் பிரச்னை தலைதூக்கினாலும் முதல் ஆளாக நிற்பவர் நல்லகண்ணு.

தாமிரபரணி ஆற்றின் வடகால், தென்கால் பாசனங்கள் மூலம்தான் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள 43,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அத்துடன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர்த்தேவையை முழுமையாகவும், தென்காசி, விருதுநகர் மாட்டத்தின் பகுதித் தேவையையும் பூர்த்தி செய்கிறது. தாமிரபரணி ஆற்றைத் தூர்வாருகிறோம் என்ற பெயரில் மணல் மாஃபியாக்கள் ஆற்று மணலை அள்ளி விற்பனை செய்து வந்ததை அறிந்து விவசாயிகள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

நல்லகண்ணு வாழ்ந்த வீடு

அந்த நேரத்தில் விவசாயிகளுடன் கரம் கோர்த்து மணல் கொள்ளையை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடத்தியதுடன், நீதிமன்றத்தில் தடை உத்தரவையும் பெற்று மண் வளத்தை காத்தார். அவரது இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது.” என்றனர். விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளது.

'80 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் விஜய்?' - குழப்பத்தில் நிர்வாகிகள்!

தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் வருகிற 28 ஆம் தேதி வெளியிடப்போகிறார் என பனையூர் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் தகவலால் மாவட்டச் செயலாளர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் குழப்பத்தில... மேலும் பார்க்க

நல்லகண்ணு: "அவரைப் பார்த்துத்தான் நான் அதைச் செய்தேன்; அதுவே என் வீர வணக்கம்" - நடிகர் பார்த்திபன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக... மேலும் பார்க்க

மும்பை: ரூ.80,000 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட்; வரவைவிட செலவு அதிகம்; என்ன செய்யப்போகிறது அரசு?

இந்தியாவிலேயே மிகவும் பணக்கார மாநகராட்சியாக மும்பை மாநகராட்சி விளங்குகிறது. மும்பை முழுவதும் ஏராளமான கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.இத்திட்டங்களை மும்பை மாநகராட்சியும், மும்பை மெட்... மேலும் பார்க்க

`இஸ்ரேல் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன்.!' - பிரதமர் மோடி

இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை (நேற்று) இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். 2017-க்குப் பிறகு இந்தியாவின் பிரதமர் பிரதமர் மோடி மேற்கொண்ட இரண்டாவது ... மேலும் பார்க்க

நல்லகண்ணு: "அண்ணா, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை இவரிடம் பார்த்தேன்" - ரஜினிகாந்த்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்... மேலும் பார்க்க

`தொகுதிகளை குறைக்கும் திமுக; திருமாவளவன் வருத்தத்தில் உள்ளார்!' - சொல்கிறார் அண்ணாமலை

கோவை காளப்பட்டி பகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "திமுக எம்.பி தயாநிதி மாறன், கோயம்புத்தூர் மக்கள் அவர்களை சுற்றியுள்ள அனைவரையும் கெட... மேலும் பார்க்க