இனி 'இந்த' ஏஐ வேண்டாம் - ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு; காரணம் என்ன?
தாய் கிழவி: "மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டர்.!"- படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
இப்படம் (பிப்.27) வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டி இருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " 'தாய் கிழவி' படம் மனதிற்கு நெருக்கமான படைப்பாக இருக்கிறது.
படத்தின் முதல் பாதி மிகவும் ஜாலியாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது. அந்த ஆம்புலன்ஸ் காட்சியில் இருந்து படம் அப்படியே மாறி, இரண்டாம் பாதியின் இறுதியில் ஒரு மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டராக உருவெடுக்கிறது.
பேராசை, கல்லாமை, வாழ்க்கையின் நோக்கம் மற்றும் பெண் முன்னேற்றம் போன்ற பல கருப்பொருள்கள் மிக அழகாகக் கையாளப்பட்டுள்ளன.
சிறப்பான இயக்கம் மற்றும் எழுத்திற்காக இயக்குநர் சிவகுமார் முருகேஷனுக்கு எனது பாராட்டுகள்.
அனைத்து கதாபாத்திரங்களும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சரியான நடிகர்களின் தேர்வு மற்றும் அனைவரது கூர்மையான நடிப்பு இந்தப் படத்தை ஒரு சிறந்த திரைப்படமாக மாற்றியிருக்கிறது.
ராதிகா அவர்களின் நடிப்புத் திறமையை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் இந்தப் படம் அதை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றிருக்கிறது.

நிவாஸ் கே. பிரசன்னா அவர்களின் இசை படத்திற்கு வலு சேர்த்ததோடு, அவரது மாறுபட்ட இசை அணுகுமுறை படத்துடன் மிகச்சரியாக பொருந்தி இருக்கிறது.
இந்த சிறப்பான படத்தை வழங்கியதற்காக சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுகள். படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று பாராட்டியிருக்கிறார்.















