மேட்டூர் அணை: ``முதல்வர் விஜய் விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்க வேண்டாம்" - ...
தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்!
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற இருக்கிறது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க- வில் இணைந்த சத்யபாமாவை வேட்பாளராக களமிறக்கியிருக்கிறது த.வெ.க.
அ.தி.மு.க வேட்பாளராக களத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே மாதத்திற்குள் பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க- வில் இணைந்த சத்யபாமாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது அ.தி.மு.க, த.வெ.க மட்டுமின்றி சில கிராமங்களிலும் அதிருப்தி நிலவி வருகிறது. 'வாக்கு சேகரிக்க யாரும் வர வேண்டாம் ' என சில கிராமங்களில் பேனர் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று தாராபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சத்தியபாமாவிற்கு எதிராக கூட்டத்தில் இருந்த சிலர் கோஷங்களை எழுப்பியுள்ளனர். குறிப்பாக உப்பாறு பாசனம் குறித்தும் குறித்து பல்வேறு கேள்விகளை விவசாயிகள் எழுப்பியுள்ளனர்.
தொடர்ந்து சத்தியபாமா பதில் அளிக்க முயற்சி செய்தும் கூட்டத்தில் இருந்தவர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.


















