செய்திகள் :

தாராபுரம்: "துரோகத்திற்கு நீதி கேட்டு வந்திருக்கிறேன்" - எடப்பாடி பழனிசாமி உருக்கம்!

post image

தாராபுரம் ( தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற உள்ளது நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க வேட்பாளர் பானுமதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட மூலனூர் பகுதியில் நேற்று மாலை பேசிய எடப்பாடி பழனிசாமி, " தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு ஏன் இந்த இடைத்தேர்தல் வந்தது என்று மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். கடந்த பொதுத்தேர்தலில் நமது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவர், மக்களின் தீர்ப்பை மதிக்காமல், பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு குதிரை பேரத்தின் மூலமாக ஓடிப்போயிருக்கிறார். தாராபுரம் தொகுதி மக்களின் மாண்பையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு,

எடப்பாடி பழனிசாமி

பதவிக்காகவும் பணத்திற்காகவும் கட்சி தாவிய அந்த துரோகிக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். துரோகத்திற்குத் துணை போனவர்கள் மீண்டும் உங்களிடம் வாக்குக் கேட்க வரும்போது மக்கள் சக்தியின் வலிமையை அவர்களுக்குக் காட்ட வேண்டும். அ.தி.மு.க-வை விமர்சிக்க இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? பெட்டியை வாங்கிக் கொண்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த தற்போதைய த‌.வெ.க வேட்பாளருக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பு இவரைப் போன்ற மற்றவர்களுக்கு வருங்காலத்தில் தகுந்த பாடமாக இருக்க வேண்டும். உண்மையில் நான் ஓட்டு கேட்டு வரவில்லை. இந்த இயக்கத்திற்கும் தொகுதி மக்களுக்கும் பச்சை துரோகம் இழைத்ததற்கு நீதி கேட்டு வந்திருக்கிறேன் " என்றார்.

தாராபுரம்: திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் | Photo Album

திருப்பூர் இடைத்தேர்தல் உதய ஸ்டாலின் பிரச்சாரம்திருப்பூர் இடைத்தேர்தல் உதய ஸ்டாலின் பிரச்சாரம்திருப்பூர் இடைத்தேர்தல் உதய ஸ்டாலின் பிரச்சாரம்திருப்பூர் இடைத்தேர்தல் உதய ஸ்டாலின் பிரச்சாரம்திருப்பூர் இ... மேலும் பார்க்க

தாராபுரம்: "30 நிமிடங்களில் 32 முறை திமுக என்று பேசியிருக்கிறார் முதல்வர்" - உதயநிதி காட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற ( தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க தரப்பில் வேட்பாளராகப் போட்... மேலும் பார்க்க

தாராபுரம்: பிரசாரத்தில் தாக்கப்பட்டாரா அமைச்சர் சம்பத் குமார்? உள்ளுர் மக்கள் சொல்வது என்ன?

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற‌த் தொகுதிக்குக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் நடைபெற இருக்கிறது. ராஜினாமா எம்.எல்.ஏ- வான சத்தியபாமா தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார... மேலும் பார்க்க

தாராபுரம்: "அதிமுக-திமுக கூட்டு சேர்ந்து எங்களுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்" - தவெக சத்தியபாமா

தாராபுரம் தொகுதி த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவிற்கு எதிராக தொகுதியில் நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கு சேகரிக்க சென்றாலும் அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் ம... மேலும் பார்க்க

"எடப்பாடியுடன் கூட்டணி வைத்தால் துணை முதல்வர் பதவி என்றார் ஆதவ் அர்ஜுனா" - ரகசியம் பகிர்ந்த சீமான்

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களத்தில் உள்ள கார்த்திகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு தொண்டர்கள்... மேலும் பார்க்க

தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' - ஆவேசமான நிர்வாகிகள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6- ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். த.வெ.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சத்... மேலும் பார்க்க