செய்திகள் :

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில்: மண்ணே பிரசாதம்... நோய் தீரும் அதிசயம்!

post image

முருகப்பெருமான் சித்தர்கள் கொண்டாடிய தெய்வம். பல தலங்களில் அவர்கள் முருகப்பெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். அப்படி அவர்கள் வழிபட்ட மூர்த்தியைத் தரிசனம் செய்வதும் வழிபடுவதும் நமக்கு மிகுந்த நற்பலன்களைக் கொடுக்கும்.

நம் வினைகளைத் தீர்க்கும். அப்படி ஒரு தலம்தான் தாண்டிக்குடி. பழநி முருகனை விரதம் இருந்து வழிபடும் பக்தர்கள் தாண்டிக்குடி முருகனையும் வழிபட வேண்டும் என்பார்கள் அந்தப் பகுதி மக்கள். அந்த அளவுக்குச் சாந்நித்தியம் வாய்ந்த இந்தத் திருத்தலத்தின் மகிமைகளைத் தெரிந்துகொள்வோம்.

தாண்டிக்குடி பாலமுருகன்
தாண்டிக்குடி பாலமுருகன்

திண்டுக்கல் மாவட்டத்தில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபாலமுருகன் கோயில். திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில், சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

கற்பக மகா முனிவர் என்னும் முனிவர், முருகக்கடவுளை எண்ணித் தவம் செய்த தலம் இது. இந்தத் தலத்தில் முருகன் அவருக்குக் காட்சி கொடுத்து அருளினார் என்கிறது தலபுராணம்.

ஒருமுறை இந்தப் பகுதிக்கு பன்றி மலை சாமியார் என்ற மகான் எழுந்தருளினார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த மாட்டுத் தொழுவமாகத் திகழ்ந்த ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, 'இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் இடம். உடனே, இங்கு முருகனுக்குக் கோயில் கட்டுங்கள்’ என்றார்.

மக்கள் அவர் சொல்லை மதித்து, அந்த இடத்தை உடனே சுத்தம் செய்தார்கள். அப்போது அந்த இடத்தில் ஏற்கெனவே கோயில் இருந்ததற்கான சுவடுகள் தெரிந்தன. இதைக் கண்டதும் மக்கள் உற்சாகம் அடைந்தனர்.

அதன்பின் அந்த இடத்தின் புராணத்தைத் தேடியபோது கற்பக மகா முனிவரைப் பற்றியும் முருகப்பெருமான் அவருக்காக எழுந்தருளியது குறித்தும் தெரியவர பூரித்துப் போயினர்.

தாண்டிக்குடி பாலமுருகன் கோயில்
தாண்டிக்குடி பாலமுருகன் கோயில்

இந்த ஊரில் உள்ள மலை குறித்த தல வரலாறும் சுவாரஸ்யமானது. அகத்திய முனிவரின் ஆணை படி, திருக்கயிலாயத்தில் இருந்து இரண்டு மலைகளைத் தூக்கி வந்தான் இடும்பன்.

அந்த இரண்டு மலைகளையும் அவன் பழநியில் வைத்துச் சற்றே இளைப்பாற, அப்போது பாலமுருகனாக வந்த முருகக்கடவுள், ஒரு மலையின்மீது ஏறி அமர்ந்து கொண்டார். அதன் பிறகு, அந்த மலையை இடும்பனால் அசைக்கக்கூட முடியவில்லை. அதுவே பழநிமலை.

இன்னொரு மலையை எடுத்துச் சென்றார் இடும்பன். அதுவே தாண்டிக்குடி மலை என்கிறது ஸ்தல புராணம். பழநிமலையை சிவகிரி என்றும், தாண்டிக்குடி மலையை சக்திகிரி என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்.

கோயிலின் மூலவர் மற்றும் உற்சவர் இரண்டு பேருமே கொள்ளை அழகுடன் தரிசனம் தருகின்றனர். தற்போதுள்ள மூலவர் விக்ரகம் உருவாக்கிய சிற்பியின் கனவில் முருகப்பெருமானே தோன்றி எவ்வாறு அமைய வேண்டும் என்று கூறி அருளினார் என்கிறார்கள்.

மாதந்தோறும் கிருத்திகையில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடிக் கிருத்திகை இங்கே மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, தேரில் பிராகார வலம் வரும் முருகனைத் தரிசித்தால், பிள்ளை வரம் கிடைக்கப் பெறலாம், தடைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு இந்தத் திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதைப் பூசிக்கொண்டால் நோய் தீரும் என்கிறார்கள்.

தாண்டிக்குடி பாலமுருகன் கோயில்
தாண்டிக்குடி பாலமுருகன் கோயில்

இந்தத் தலத்தில் தைப் பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சுற்றுவட்டார ஊர்களில் இருந்து காவடி ஏந்தியும், பால் குடம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து முருகப் பெருமானைத் தரிசனம் செய்வார்கள்.

அதேபோல், பழநிக்குக் காவடி எடுத்துச் சென்று வழிபட்ட பிறகு, தாண்டிக்குடி முருகப்பெருமானையும் வந்து தரிசித்தால்தான் விரதம் முழுமை பெறும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.

தைப்பூச நாளில், குடம் குடமாக பாலபிஷேகம் முதலான சகல அபிஷேகங்களும் நடைபெறும். ராஜ அலங்காரத்தில் முருகக் கடவுளைக் காணக் கண் கோடி வேண்டும்.

இங்கே பங்குனி உத்திரமும், வைகாசி விசாகமும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. கந்தசஷ்டியில் விரதமிருந்து வழிபட்டால், நம் கஷ்டமெல்லாம் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இடும்பர், சித்தர்கள், கால பைரவர், கணபதி, நவகிரகங்கள் மற்றும் நாகருக்கு என தனித் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. வாய்ப்பிருக்கும் பக்தர்கள் இயற்கை எழில்கொஞ்சும் இந்த மலைத்தலத்துக்கு வந்து முருகப்பெருமானை வழிபடுங்கள். வாழ்வில் வசந்தக் காற்று வீசத் தொடங்கும்.

தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம்

சித்தர்கள் அம்பிகையை சின்னஞ்சிறு பெண்ணாக, 'ஸ்ரீபாலா' என அழைத்து வழிபடுவர். அம்பிகையை பாலாம்பிகை, வாலாம்பிகை என்னும் திருநாமங்களால் அழைத்தாலே சகலவிதமான சௌபாக்கியங்களும் சேரும். அன்னை பாலாவை வழிபட்டால் ... மேலும் பார்க்க

ஈரோடு: திண்டல் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | Photo Album

ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஜகந்நாதபெருமாள்: பித்ருதோஷம் தீரும்... புத்ரபாக்யம் கிடைக்கும்!

ராமநாதபுரம் என்றாலே ஸ்ரீராமபிரான் நினைவு அனைவருக்கும் வரும். அங்கிருந்துதான் ராமபிரான் சமுத்திரத்தில் பாலம் கட்டி இலங்கை சென்றார். திரும்பி வரும்போதும் சேதுக்கரையில் சிவபிரதிஷ்டை செய்து வழிபட்டார். என... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டம் பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர்: நோய் தீர்க்கும் ஈசனின் சந்நிதி!

பிறவிப்பிணிக்கு மட்டுமல்ல வாழும்போது உண்டாகும் சகல பிணிகளுக்கும் மருந்தாகத்திகழ்பவன் ஈசன். ஈசனை வழிபட்டு நோய் அகன்ற அடியார்கள் பலர். ஈசனும் மருத்துவனாக மருந்தீசனாகக் காட்சிகொடுக்கும் தலங்களும் ஏராளம் ... மேலும் பார்க்க

கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர்: வளம் பல தரும் மாசிச் சதுர்த்தி கரும்புச்சாறு அபிஷேகம்!

பகவான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அசுரனை சம்ஹாரம் செய்தபின்பு கும்பகோணத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதில் நீராடி அதன்பின் அந்தத் தீர்த்தக் கரையில் ஒரு விநாயகர் திருமேனியை பிரதிஷ்டை செய்துவழிபட்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் சின்ன வெண்மணி பீமேஸ்வரர் திருக்கோயில்: பலம் தரும் ராகு - கேது பரிகாரத் தலம்!

மகாபாரதத்தோடு தொடர்புடைய பல ஆன்மிகத் தலங்கள் நம் தேசத்தில் உள்ளன. அதிலும் தமிழகத்தில் பல்வேறு தலங்கள் மகாபாரதக் கதாமாந்தர்களின் பெயரோடே திகழ்கின்றன. அப்படிப்பட்ட தலங்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானது... மேலும் பார்க்க