செய்திகள் :

தின SIP, வார SIP, மாத SIP... எப்படி முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

post image

மியூச்சுவல் ஃபண்டில் SIP மூலம் முதலீடு செய்கிறவர்கள் இன்றைக்கு ஏராளம் பேர். இந்தியா முழுக்க சுமார் 6 கோடி பேர் மாதந்தோறும் ரூ.32,000 கோடியை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறார்கள். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்கிறவர்கள் பலர்.

எஸ்.ஐ.பி முறையில் புதிதாக முதலீடு செய்ய வருகிறவர்கள் மாதந்தோறும் எவ்வளவு முதலீடு செய்யலாம், எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும், எத்தனை ஆண்டுகளில் முதலீடு செய்தால் எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கும் என்பதை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டபின், தவறாமல் கேட்கும் ஒரு கேள்வி:

எஸ்.ஐ.பி மூலம் மாதத்தின் எந்தத் தேதியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதுதான். அல்லது, தின SIP, வார SIP, மாத SIP - இதில் எதைத் தேர்வு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதுதான். இந்தக் கேள்விக்கான பதில் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட் | SIP

வொயிட் ஓக் (White Oak) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்கிறது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளுக்கான பி.எஸ்.இ சென்செக்ஸ் டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸ் (BSE Sensex Total Return Index) தரவுகளை ஆராய்ந்து பார்த்தபின், தின SIP, வார SIP, மாத SIP - இதில் எதைத் தேர்வு செய்தால், அதிக லாபம் கிடைத்திருக்கிறது என்பதை சொல்லி இருக்கிறது.

இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் செய்துள்ள ஆய்வின்படி, ஒருவர் 1996-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஜுன் 2026-ஆம் ஆண்டு வரை தினமும் ரூ.1000, வாரந்தோறும் ரூ.6,997, மாதந்தோறும் ரூ.30,384 வீதம் முதலீடு செய்திருந்தால், எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்பதை வொயிட் ஓக் நிறுவனம் சொல்லி இருக்கிறது.

தின SIP மூலம் ரூ.1000, வார SIP மூலம் ரூ.6,997 ஒருவர் 30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்திருந்தால், அவர் மொத்தம் ரூ.109.08 கோடியை முதலீடு செய்திருப்பார். இதற்கு 13.47% லாபம் கிடைத்திருக்கும். அதாவது, அவருக்கு ரூ.12.33 கோடி கிடைக்கும்.

மாத SIP மூலம் அவர் ரூ.30,384 முதலீடு செய்திருந்தால், முதலும் லாபமுமாக சேர்ந்து அவருக்கு ரூ.12.45 கோடி திரும்பக் கிடைக்கும். ஆக, வித்தியாசம் என்பது வெறும் ரூ.12 லட்சம் மட்டுமே!

SIP முதலீடு

இந்த ஆய்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்னவெனில், எஸ்.ஐ.பி முறையின் நீண்ட கால நோக்கில் நாம் முதலீடு செய்வதுதான் முக்கியமே தவிர, எந்தத் தேதியில் நாம் முதலீடு செய்கிறோம் என்பது முக்கியமல்ல.

ஒருவர் 25 வயதில் முதல் வேலைக்குச் சேர்ந்த உடனே எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்ய ஆரம்பித்துவிடுவது கட்டாயத்திலும் கட்டாயம்! 25 வயதில் ஒருவர் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கினால், அடுத்த 35 ஆண்டுகளுக்கு அதாவது, அவருடைய 60-வது வயது வரை முதலீடு செய்ய முடியும். ஆனால், ஒருவர் 41-வது வயதில் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கினால், 20 ஆண்டுகளுக்கு மட்டுமே அந்த முதலீட்டை செய்ய முடியும்.

அதே போல, எவ்வளவு தொகையை எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்கிறோம் என்பதைவிட, எத்தனை ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். அந்த வகையில் ஒரு வயது குழந்தைக்காக மாதந்தோறும் ரூ.500 அல்லது ரூ.1000 என்கிற கணக்கில் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கினால், அந்தக் குழந்தைக்கு 20 வயதாகும்போது கணிசமான பணம் சேர்ந்திருக்கும். அந்தக் குழந்தையின் படிப்புக்கு, திருமணத்திற்கு அல்லது ஓய்வுக் காலத்துக்கு என எதற்கு வேண்டுமானாலும் அந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்!

SIP முதலீட்டின் மூலம் 12% லாபம் எப்படிக் கிடைக்கும்? உங்கள் சந்தேகத்தைப் போக்கும் தெளிவான விளக்கம்!

நாளைய தினம் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள். இந்தியாவின் 80-வது சுதந்திரம் தினம் நாளை இந்தியா முழுக்க வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.இந்த நன்னாளில் SIP முதலீட்டைப் பலரும் ஆரம... மேலும் பார்க்க

‘செட் பண்ணியாச்சு... இனி லாபம்தான்!’ - மியூச்சுவல் ஃபண்டில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு!

"மாசம் 10,000 ரூபாய் எஸ்.ஐ.பி (SIP) போட்டாச்சு... இனி 10 வருஷம் கழிச்சு வந்து பார்த்தா கோடி கோடியா பணம் கொட்டும்!" - இப்படி நினைத்துக்கொண்டு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு நிம்மதியாகத் தூங்... மேலும் பார்க்க

SIP: `என்னது, மாதாமாதம் 100 ரூபாய்கூட முதலீடு செய்யலாமா?' - சிறு துளியை பெருவெள்ளமாக்கும் எஸ்.ஐ.பி!

மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் முதலீடு செய்யும் SIP முறையில் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய்கூட கட்டலாம் என்பது பலருக்கும் தெரியாத தகவல். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே மாதந்தோறும் ரூ.1000, ரூ.2000 க... மேலும் பார்க்க

5 ஆண்டுகளில் வீடு + கட்டும் செலவு ₹1,00,00,000 திரும்ப கிடைக்கும்! - எப்படி தெரியுமா?

"என்னதான் துபாயோ, சிங்கப்பூரோ, அமெரிக்காவோ… மாசம் லட்சம் லட்சமா சம்பாதிச்சாலும், ஊர் பக்கம் போனதும் அந்த சொந்த வீட்ல கால் வைக்கும் போது வர்ற கெத்து, வேற எங்கயுமே கிடைக்காதுங்க!"அந்நிய தேசத்துல ஏசி ரூம... மேலும் பார்க்க

80-வது சுதந்திர தினம்... இந்த நன்னாளில் நீங்களும் இதைச் செய்தால், மிகப் பெரிய முன்னேற்றம் காணலாமே!

நமது நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை இன்னும் சில நாள்களில் கொண்டாடப் போகிறோம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாய்க் கிடந்து, அவர்கள் சொல்கிற மாதிரி நடந்துகொண்டிருந்த நாம், நம்மை ஆளும் உரிமையை ந... மேலும் பார்க்க

30% - 40% சந்தை சரிந்தால் என்னாவது? உங்கள் பணத்தைக் காக்கும் ‘Asset Allocation’ செய்துவிட்டீர்களா?

நண்பரே! மாதம் பிறந்ததுமே கடினமாக உழைத்த சம்பளத்தில் மிச்சப்படுத்தி, "எப்படியாவது சீக்கிரம் பெரிய பணக்காரன் ஆகிடணும்!" என்ற கனவோடு முதலீடு செய்யத் தொடங்கும் நபரா நீங்கள்?பங்குச்சந்தை எகிறும்போது, "அடடா... மேலும் பார்க்க