செய்திகள் :

'திமுக அமைச்சர்களின் பணியாளர்களை வேறு வேறு இடங்களுக்கு மாற்றுங்கள்.!' - முதல்வர் அலுவலகம் கறார்?

post image

தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று கோட்டைக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் திமுக சார்பு பணியாளர்களையும் அதிகாரிகளையும் உடனடியாக வேறு வேறு இடங்களுக்கு மாற்றுமாறு முதல்வர் அலுவலகம் கறார் உத்தரவு பிறப்பித்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.

விஜய்
விஜய்

ஒரு புதிய ஆட்சி அமைந்தவுடன், பழைய ஆட்சியின் அரசியலர்களுடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகளையும் பணியாளர்களையும் இடமாற்றம் செய்வது வழக்கமே. திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளின் ஆட்சியின் போதுமே இது நடக்கும். அதே வழக்கத்தை இப்போது தவெக ஆட்சியிலும் கடைப்பிடித்திருக்கின்றனர்.

தலைமைச் செயலகத்தில் திமுக அமைச்சர்களின் கீழ் பணியாற்றிய பி.ஏ தொடங்கி ஆபிஸ் அசிஸ்டண்ட் வரைக்கும் அத்தனை பேரையும் வேறு வேறு துறைகளுக்கு வேறு வேறு அதிகாரிகளின் கீழ் பணியாற்ற இடமாற்றியிருக்கின்றனர்.

திமுகவுக்கு நெருக்கமான திமுகவினருடன் தொடர்பில் உள்ள பணியாளர்கள் யாரும் அப்படியே தொடரக்கூடாது என முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த கறார் உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதென தலைமைச் செயலக வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். மேலும், இப்போது உள்ள அமைச்சர்களுக்கு கடந்த ஆட்சியில் பணியாற்றிய சில முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியாளர்களை மாற்றி வழங்கியிருக்கின்றனர்.

விஜய்
விஜய்

முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர் பொறுப்பேற்றிருக்கின்றனர். அவர்களுக்கான துறை இன்னும் ஒதுக்கப்படவில்லை. அதனால் துறைமாற்றம், பதவி உயர்வு, இடமாற்றம் என எதிர்பார்க்கும் காவல்துறை அதிகாரிகளும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அமைச்சர்களை தங்களின் புரொபைல் பைலோடு சந்தித்து வணக்கம் வைத்து வருகின்றனர்.

அதிகாரத்தின் வலு என்னவென்பதை காட்டும் வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது தலைமைச் செயலக நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள்.!

'மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருக்கிறது; இந்திய பொருளாதாரம் மோசமான.!'- கெஜ்ரிவால் காட்டம்

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் - எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு வெளியான மே-4 க்குப் பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதில் தொடங்கி தற்போது அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர் மாளி... மேலும் பார்க்க

தேனி: துடைத்தெறியபட்ட அதிமுக… கட்சிக்கு கஷ்ட காலத்தில் கைகொடுத்த மாவட்டத்தில் வீழ்ச்சி! என்ன காரணம்?

அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் களம் கண்டு வெற்றி பெற்ற மாவட்டம் தேனி. இங்கு உள்ள நான்கு தொகுதிகளிலும் கோலோச்சி வந்த அ.தி.மு.க, தற்போது நடந்... மேலும் பார்க்க

தகர்த்த செந்தில் பாலாஜி; கொடியேற்றிய விஜய்... `கோட்டை'யில் கோட்டைவிட்ட அதிமுக!

“கோவை என்றைக்கும் அண்ணா தி.மு.க கோட்டை. எனவே, கோவையில் அனைத்து தொகுதிகளிலும் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்” என்று தேர்தலுக்கு முன்பு நம்பிக்கையோடு சொல்லி வந்த எஸ்.பி.வேலுமணியைத் தவி... மேலும் பார்க்க

``தலித் ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை" - திருமாவளவன் விளக்கம்

விசிக மீதான விமர்சனம் குறித்து, விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசிய சில கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமாவளவன் தன் எக்ஸ... மேலும் பார்க்க

"பழையபடி +2 மதிப்பெண்களின்படி, MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்" - முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வினாத்தாள் கசிந்ததால், கடந்த 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக த... மேலும் பார்க்க