செய்திகள் :

திமுக எம்எல்ஏ கைது: ``திமுக-வினரைத் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில்..." - ஆர்.எஸ். பாரதி கண்டனம்

post image

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடி சிறைச்சென்ற பாரம்பர்யம் கொண்ட தி.மு.க, இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அஞ்சாது.

ஜனநாயகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும். தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த இந்த 60 நாட்களிலேயே சகிப்புத்தன்மை அறவே இல்லை என்பதை நிரூபித்துவிட்டது.

பிற கட்சிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்களது பக்கம் இழுக்கும் இந்த அரசு, தி.மு.க-வில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வைரத்தைப் போன்ற உறுதிமிக்க தொண்டர்களாக இருப்பதால் அவர்களை மாற்ற முடியாது என்ற காரணத்தால், இது போன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மார்க்கண்டேயன்
மார்க்கண்டேயன்

அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து இரண்டாவது எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க-வினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே கைது செய்கிறார்கள். நீதிமன்றத்தின் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த விவகாரங்களைச் சட்டரீதியாக எதிர்கொள்ள தி.மு.க தயாராக இருக்கிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பேண வேண்டிய காவல்துறை, அதற்கு நேரமில்லாமல் தி.மு.க-வுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கல்லூரி இளைஞர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் நள்ளிரவில் சென்று அச்சுறுத்தி வருகிறது.

மேலும், ஊடக விமர்சகர் விஜயன் போன்றவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத ஒன்றாகும்" என்றார்.

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் து... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" - ராகுல் காந்தி கேள்வி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சக... மேலும் பார்க்க

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' - பெ.சண்முகம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழ... மேலும் பார்க்க