செய்திகள் :

"திமுக-வுக்கு அது வெற்றியைத் தரும் என்று நம்புவது மூடநம்பிக்கை" - பிரவீன் சக்கரவர்த்தி சொல்வது என்ன?

post image

தேர்தல் நெருங்கி வருவதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கூட்டணி குறித்து பரபரப்பான கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள்.

சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லாதது எனவும் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்திருந்தார்.

 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர்.

இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூட்டணி தொடர்பாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகவும் பேசியிருந்தார்.

திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, "இனி யாரும் கூட்டணி ஆட்சி குறித்து பேசமாட்டார்கள். உரிமைத் தொகை ரூ.5000 கொடுத்த பிறகு மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியும்.

அதனால், இனி யாரும் அது பற்றி பேசமாட்டார்கள். எங்களுடைய தலைவர் தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

காங்கிரஸில் இருந்து ராகுல் காந்தி, கார்கே, செல்வப் பெருந்தகை கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம்" எனப் பேட்டியளித்திருந்தார்.

இந்தப் பேட்டியை ரீட்வீட் செய்து காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் பிரவீன் சக்ரவர்த்தி, "மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது.

ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூட நம்பிக்கை.

கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன. 5 தோல்வியடைந்தன" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டு வருகிறார்.

`அன்று கருணாநிதி ஒழிக; இன்று ஸ்டாலின் வாழ்க’ - கட்சித் தாவிய அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர்

இருக்கிற இடம் தெரியாதபடி ஒரு குழந்தை இருந்தால், `சமத்து’ என்பார்கள். அதுபோல, கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் `இப்படியொரு மந்திரி இருந்தாரா?’ என்பதே தமிழகத்தில் பலருக்குத் தெரியாது.அப்படியிருந்தும், த... மேலும் பார்க்க

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு விவகாரம்: "இப்ப என்ன அவசரம்?" - மூத்த தலைவர் புஜ்பால் கேள்வி

மகாராஷ்டிராவில் சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சி 2023 ஆம் ஆண்டு இரண்டாக உடைந்தது.சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித்பவார் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களுடன் சென்று ஒட்டுமொத்த கட்சியையும் தன்வசப்படு... மேலும் பார்க்க

”மகளிர் உரிமைத் தொகைக்கு முட்டுக்கட்டை போட நினைத்ததை முதல்வர் தகர்த்து விட்டார்” - உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கோவி.செழியன்... மேலும் பார்க்க

தொகுதி பங்கீடு: "மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம்" - கொதிக்கும் மாணிக்கம் தாகூர்

மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணியில் ... மேலும் பார்க்க

உக்ரைன் - ரஷ்யா: "20 வருடங்கள் அமெரிக்கா பாதுகாப்பு தர வேண்டும்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போர் முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்க்களத்தில் மோதல்கள் நீடித்தாலும், மறுபுறம் தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.... மேலும் பார்க்க

கோவையில் செந்தில் பாலாஜியை முந்திய வேலுமணி; ஹாட் பாக்ஸுடன் இறங்கிய அதிமுக; வீடு தேடி வரும் பரிசுகள்

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிடினும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகதான் வென்றது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அத... மேலும் பார்க்க