செய்திகள் :

திமுக வேட்பாளர் வில்வநாதன் குடைச்சல்; ஒன்றியச் செயலாளர் ராஜினாமா! - அடிசறுக்கும் ஆம்பூர் தொகுதி?

post image

ஆதிக்க சக்திகளின் அழுத்தம்

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியக் குழுவின் சேர்மனாக இருப்பவர் அகரம்சேரி சுரேஷ்குமார். தி.மு.க-வில், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றியச் செயலாளராகவும் கட்சிப் பணியாற்றிவந்த சுரேஷ்குமார் நேற்றைய தினம் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அதில், ``சில ஆதிக்க சக்திகளின் அழுத்தத்தின் காரணமாக ஒன்றியச் செயலாளர் பொறுப்பினை தொடர முடியாத காரணங்களினால், அப்பொறுப்பில் இருந்து என்னை விடுவித்திட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். சேர்மன் சுரேஷ்குமார் குறிப்பிடும் அந்த ஆதிக்க சக்தி, தற்போதைய ஆம்பூர் தொகுதி தி.மு.க வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான அ.செ.வில்வநாதன் தான் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

ஜூனியர் விகடன் கட்டுரை

கடந்த 30-11-2025 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ``கக்கூஸ் கட்டுவதில்கூட தலையிடுகிறார்... `ஹிட்லரிச’ மனோபாவத்தில் அசிங்கப்படுத்துகிறார்..! - தி.மு.க எம்.எல்.ஏ-மீது, ஒன்றிய சேர்மன் காட்டம்!” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், எம்.எல்.ஏ வில்வநாதன் குறித்து சுரேஷ்குமார் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார். வில்வநாதனுக்கு எதிராக, மாவட்ட ஆட்சியர் தொடங்கி முதல்வர் வரை முறைகேடு புகார் மனுக்களையும் அனுப்பியிருந்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வில்வநாதனும் பதிலளித்திருந்தார்.

அதைத்தொடர்ந்துதான் சுரேஷ்குமாரை ஒரே அடியாக ஓரங்கட்டும் முயற்சியில் தீவிர உள்ளடி வேலைப் பார்த்ததாகவும் வில்வநாதன் மீது உடன்பிறப்புகளே கொந்தளிக்கின்றனர். 1996-ல் வேலூர் எம்.பி-யாகவும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தி.மு.க செயலாளராகவும் இருந்த ப.சண்முகத்தின் மகன்தான் சேர்மன் சுரேஷ்குமார். கட்சிக்குள் தனக்குப் போட்டியாக சுரேஷ்குமார் வளர்வதை வில்வநாதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எ.வ.வேலு மூலமாக குடைச்சல் கொடுத்ததால், கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ளும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் சுரேஷ்குமார் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

வில்வநாதன் - சுரேஷ்குமார்

ராஜினாமா பற்றி சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கடந்த மூன்று ஆண்டுகாலமாகவே, சேர்மன் பதவியிலும் என்னை செயல்படவிடாமல் முடக்கி வைத்தார்கள். என்னுடைய கட்டுப்பாட்டிலுள்ள ஒன்றிய நிர்வாகத்தில் வில்வநாதனே அதிகாரம் செலுத்தி வருகிறார். மூன்றாவது தலைமுறையாக தி.மு.க-வில் பயணித்தபோதும், என்னை நிராகரித்துவிட்டனர்’’ என்றார் ஆதங்கமாக.

அதேபோல, பல்வேறு விவகாரங்கள் வில்வநாதனுக்கு எதிராக புயலடிக்கின்றன. தேர்தல் நேரத்தில் உட்கட்சி விவகாரங்கள் ஒவ்வொன்றாக வில்வநாதனுக்கு எதிராக வெடிப்பதால், ஆம்பூர் தொகுதியில் தி.மு.க அடிசறுக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்!

'தனிச் சின்னம் வேண்டாம்!'- ஒதுக்கபட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் மதிமுக

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள் தலா 5, கொமதேக 2, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக-வுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் எஸ்டிபிஐ உட்பட சில சி... மேலும் பார்க்க

விசிக: ``யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது.!" - ஆளூர் ஷா நவாஸ் விளக்கம்!

நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்ப்படவில்லை. இதற்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படு வந்தத... மேலும் பார்க்க

'விஜய்யை பற்றியும் அவருடைய வேட்பாளரை பற்றியும் பேச மாட்டேன்' – இயக்குநர் சுந்தர்.சி

அதிமுக கூட்டணியிலுள்ள புதிய நீதிகட்சி சார்பாக மதுரை மத்திய தொகுதி வேட்பளாராக இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக இன்று மதுரைக்கு வந்திருந்த சுந்தர்.சி செய்தியாளர்களை சந... மேலும் பார்க்க

கூட்டணி ஃபார்முலாவில் எம்ஜிஆர் கில்லியாக இருந்தது எப்படி தெரியுமா? | ‘வாவ்’ வியூகம் 11

‘வாவ்’ வியூகம் 11கூட்டணி ஃபார்முலாவில் எம்ஜிஆர் கில்லிதேர்தல் அரசியலில் கட்சிகள் ஆட்சிக்கு வருவதும், ஆட்சியை இழப்பதும் கூட்டணியால்தான். சரியான கூட்டணி என்பது மக்கள் விரும்பும் கூட்டணியாகவும் இருக்க வே... மேலும் பார்க்க

"விஜய்யுடன் பேசி NDA கூட்டணி ஆட்சி அமைக்கும்.!"- மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சொல்வதென்ன?

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருக்கிறார். புதுச... மேலும் பார்க்க

AI-ஆல் பறிபோன வேலை: விபரீத முடிவெடுத்த இளைஞர்; 18-வது மாடியிலிருந்து குதித்த மனைவி - பெங்களூர் சோகம்

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பானு சந்தர் ரெட்டி (32). இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பீபி ஷாஜியா சிராஜ் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக வேல... மேலும் பார்க்க