செய்திகள் :

``திமுக-வை பாஜக பக்கம் இழுத்துச் செல்கிறார் ஆ.ராசா’’ - அமைச்சர் வன்னி அரசு சூசகம்!

post image

ராணிப்பேட்டையில் இன்று, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``தோல்வி ஏற்பட்டதில் இருந்து ஆ.ராசா மிகுந்த மன உளைச்சலில் பலவிதமாக உளறி வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் மீது அவர் தாக்குதல் நடத்துவதன் மூலமாக தி.மு.க எனும் பேரியக்கத்தை பா.ஜ.க-வுடன் அல்லது பா.ஜ.க பாதையில் இழுத்துச் செல்கிறாரோ? என்கிற ஐயம் எனுக்குள் இருக்கிறது.

திராவிடக் கொள்கைகளை அழுத்தமாக, வலிமையாகப் பேசி வருகின்ற இயக்கங்களான விடுதலைச் சிறுத்தைகளும், இடதுசாரிகளும் புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளுடனும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அமைச்சர் வன்னி அரசு

விடுதலைச் சிறுத்தைகளை விமர்சிப்பதன் மூலமாக அல்லது விடுதலைச் சிறுத்தைகள் மீது அவதூறுகளைக் கொட்டுவதன் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார்? அதைத்தான் நாம் கேட்கிறோம். எனவேதான் பா.ஜ.க பக்கம் தி.மு.க-வை இழுத்துச் செல்ல முயல்கிறாரா? என்ற ஐயம் ஏற்படுகிறது. அந்தப் பின்னணியில்தான் அவர் எங்களை விமர்சனம் செய்கிறாரே தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.

முதல்வர் ஜோசப் விஜய் மிகுந்த தெளிவுடன் இடதுசாரி கொள்கையோடு ஆட்சி நடத்துகிறார். முதல்வரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். சமூகநீதி தொடர்பாக, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மரியாதைக்குரிய அன்புமணி ராமதாஸும் முதல்வரைச் சந்தித்திருக்கிறார். எங்களின் கொள்கையும், கோட்பாடும் அதுதான். எனவே, மரியாதைக்குரிய அன்புமணி ராமதாஸ் முதல்வரைச் சந்திப்பதும், முதல்வருடன் நெருக்கம் காட்டுவதும் தவறில்லை’’ என்றார்.

`கர்நாடக அரசின் பிராக்ஸி அரசா இந்த அரசு?' - ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனத்திற்கு அதிமுக எதிர்ப்பு

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட நாராயணாவை நியமித்ததற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது குறித்து அதிமுக ஐ.டி விங் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

`ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள்; செயல்பாடுகளில் மர்மம்; CBCID விசாரணை வேண்டும்' - பெ.சண்முகம் அறிக்கை

`ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள் நடக்கிறது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளத... மேலும் பார்க்க

'ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய பதவி வழங்கிய முதல்வர் விஜய்!' - விவரம் என்ன?

ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட நாராயணாவுக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பொறுப்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய். வெங்கட நாராயணாதிரையுலகில் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தை தயார... மேலும் பார்க்க

ஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல... இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! - மத்திய அரசு சொல்வதென்ன?

'பாஸ்போர்ட் வெறும் போக்குவரத்து ஆவணம் தான்... குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல' - இது நேற்று முன்தினம் (ஜூன் 24, 2026) மத்திய வெளியுறவுத் துறை கூறிய ஒரு ஸ்டேட்மென்ட். ஆதார் கார்டை எடுத்துக்கொண்டாலுமே, அது ... மேலும் பார்க்க

`கன்ஃபெஷன் ரூம் டு கன்சல்டன்ட் ரூம்' - அறிவாலயத்தில் பிக்பாஸ் சாஷோ?!

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் அதிரி புதிரி அரசியலுக்குத் திமுக திரும்பிட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தோல்விக்கான காரணங்கள் அறிக்கையாக கட்சித் தலைமைக்குச் சமர்ப்... மேலும் பார்க்க

`மூக்கைப் பிடிச்சிக்கிட்டு நிற்க வேண்டியிருக்கு' - கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அவல நிலை!

தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையம் சற்றே பொலிவிழந்திருப்பது உண்மைதான்ஆனால், இன்னமும் சென்னைக்குள்ளும், புறநகர்ப் பகுதிகளுக்கும... மேலும் பார்க்க