செய்திகள் :

திருச்சி: சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை? டிரைவரைத் தாக்கிய உறவினர்கள்! - என்ன நடந்தது?

post image

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவருடைய தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். அபோது, அந்தப் பகுதியில் அவருடைய தோழியின் தாயாரை சிவகங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக மாரி செல்வன் என்கிற கார் ஓட்டுநர் வந்துள்ளார். இந்த நிலையில், மாரிசெல்வன் இரவு நேரத்தில் அந்த 14 வயது சிறுமியைத் தனியாகப் பேசி அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுமி கீரை கடை பகுதியில் மதுபோதையில் சுய நினைவின்றி கிடந்துள்ளார். இதைப் பார்த்த பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் வந்த போலீஸார் அந்தச் சிறுமியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடைய, அந்தச் சிறுமியின் உறவினர்கள் இது குறித்து அப்பகுதியில் விசாரித்ததில் மாரி செல்வன் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. அவர் சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி உள்ளார் எனக் குற்றம்சாட்டி மாரி செல்வனை அவருடைய உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், மாரிச்செல்வன் காயமடைந்தார்.

trichy

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் மாரி செல்வனை மீட்டு அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், அந்த 14 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாக மாரி செல்வன் துன்புறுத்தி உள்ளாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் குவிந்த இந்தச் சிறுமியின் உறவினர்கள், 'காந்தி மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிறுமி ஒருவருக்கு மது கொடுத்து பாலியல் கொடுமையில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக... மேலும் பார்க்க

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க