செய்திகள் :

திருச்சி: 'மாணவர்களுக்கு இடைஞ்சல்; பெண்களுக்குப் பயம்' - டாஸ்மாக் பாரை மூட கோரி போராட்டம்

post image

திருச்சி மாநகரம், டி.வி.எஸ் டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை பார் வசதியுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறு ஏற்படுவதாகவும் குறிப்பாக போக்குவரத்து நிறைந்த இந்தப் பகுதிகளில் அதிக அளவு விபத்து ஏற்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதைத் தொடர்ந்து, உடனடியாக அந்த டாஸ்மாக்கை அந்தப் பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்த பாரை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, போலீஸார் அவர்களைத் தடுத்ததால் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

டாஸ்மாக் பாரை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினர் போராட்டம்
டாஸ்மாக் பாரை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினர் போராட்டம்

இதுகுறித்து, நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள்,

"இந்த டாஸ்மாக் பார் 24 மணி நேரமும் நான் ஸ்டாப்பாக இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் மதுவை அருந்திவிட்டு மதுப்பிரியர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிறார்கள். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவிகள் இந்தப் பகுதியை கடந்து போக அஞ்ச வேண்டிய சூழல்.

பெண்கள் இந்தப் பகுதியைக் கடக்க முடியவில்லை. மதுப்பிரியர்களால் எந்நேரமும் ஆபத்து வரக்கூடும் என்ற நிலையே உள்ளது. அதனால், உடனடியாக அந்தப் பாரை அங்கிருந்து அப்புறப்படுத்த வில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தனர்.

திருச்சி: மது அருந்த பணம் தராத மனைவி; குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற கணவன்!

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது: 45). இவர், விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் சின்னம்மாள் (வயது:42) . இவர்களுக்... மேலும் பார்க்க

திருவாரூர்: தனியாக நின்ற பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் ஈவ் டீசிங்; தவெக நிர்வாகி கைது

தவெக-வின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்கிற ஆனந்தராஜ் (24). இவரும், இவரது நண்பர் அசோக் என்பவரும் நேற்று இரவு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். அங்கு 22 வயது இள... மேலும் பார்க்க

திருமணமான 48 நாளில் தற்கொலை: மனைவியை கண்காணிக்க வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்திய டாக்டர்

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வசிக்கும் டாக்டர் நிதின் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தான் விஷாகா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில நாட்களில் நிலைமை மாறியது. திரு... மேலும் பார்க்க

அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி; தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரைத் தாக்கிய புதிய தமிழகம் நிர்வாகிகள்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள காமராஜர் நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோயிலில்திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவின்போது காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாட... மேலும் பார்க்க

சூலூர் சிறுமி பாலியல் கொடுமை வழக்கு: 2வது குற்றவாளியிடம் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்மீது புகார்!

தஞ்சாவூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் கன்னித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மனைவி தனலட்சுமி. பெருமாள் மனைவி கிருஷ்ணம்மாள். இவர்கள் இருவரும் தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்திடம் இன்று புகார்... மேலும் பார்க்க

கோவை: கிணற்றில் வீசிய துர்நாற்றம்; சாக்குப்பையிலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உடல் - போலீஸ் விசாரணை!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் கோபி ராசிபுரம் பகுதியில் செயல்படாத தொழிற்சாலை ஒன்று உள்ளது. தற்போது அந்த தொழிற்சாலையை திருமண மண்டபமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்... மேலும் பார்க்க