செய்திகள் :

திருச்செந்தூர்: கோயிலில் ரூபாய் நோட்டுகளைக் கிழித்தெறிந்த தாய், மகன்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருகிறார்கள்.

ஆதரவற்றவர்கள், வீட்டை விட்டு வந்தவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என, கோயில் வளாகத்தில் நிரந்தரமாகவே பலரும் தங்கி இருக்கிறார்கள். காலை முதல் இரவு வரை திருக்கோயிலில் தரப்படும் தொடர் அன்னதான உணவை உண்டு தங்கி வருகிறார்கள்.

ரூபாய் நோட்டுகளை கிழித்துப் போடும் தாய்,மகன்
ரூபாய் நோட்டுகளை கிழித்துப் போடும் தாய்,மகன்

இந்த நிலையில், திருக்கோயில் வளாகத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரும், அவரது 40 வயது மகனும் கடந்த சில மாதங்களாகவே தங்கி வருதுள்ளனர். இந்த நிலையில், கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் அமர்ந்து கொண்டு தங்கள் உடைமைகளை வைத்திருந்த பையில் இருந்து ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பிலான ரூ.10, 20, 50, 100, 200 மற்றும் ரூ.500 வரையிலான ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்துள்ளனர். திடீரென இருவரும் மாறி மாறி ரூபாய் நோட்டுகளைக் கிழித்து வீசிக் கொண்டிருந்தனர்.

கோயில் வளாகத்தில் ரூபாய் நோட்டுகள் கிழித்துப் போடப்பட்டிருந்ததைக் கண்ட பக்தர்கள் மற்றும் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். எதற்காக ரூபாய் நோட்டுகளை இப்படிக் கிழித்துப் போடுகிறீர்கள் என அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கேட்டதற்கு, “அது எங்களோட பணம். நாங்க என்ன வேணும்னாலும் செய்வோம்” எனச் சொல்லிக்கொண்டே  மீண்டும் ரூபாய் நோட்டுகளைக் கிழித்துக் கீழே போடுகின்றனர்.

அப்போது அங்கு நின்ற பெண் ஒருவர், ”உழைத்த பணத்தை யாரும் இப்படி கிழிக்க மாட்டார்கள்” எனக்  கூறுகிறார். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில், கோயில் வளாகத்தில் இருவரும் கடந்த சில நாட்களாகச் சுற்றித் திரிந்ததாகவும், அவர்களை அந்தப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் பிடித்து விசாரித்துள்ளனர்.

ரூபாய் நோட்டுகளை கிழித்துப் போடும் தாய், மகன்
ரூபாய் நோட்டுகளை கிழித்துப் போடும் தாய், மகன்

பையில் இருந்த பணம் யாருடையது என்று கேட்டதற்கு எங்கள் பணம் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று கூறி இந்தச் செயலில் அவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தாய், மகன் இருவரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் தெரிகிறது என்கின்றனர்.

அவர்கள் தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து போலீஸார் அவர்கள் யார்? அவர்களிடம் பணம் எப்படி வந்தது? என, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பதி கோயிலுக்கு வழங்கப்பட்ட 121 கிலோ தங்க ஆபரணங்கள்; என்னென்ன தெரியுமா? | Photo Album

திருப்பதி கோயில்: 121 கிலோ தங்க ஆபரணங்கள் நன்கொடை; யார் இந்த வர்தமான் ஜெயின்?Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BRE... மேலும் பார்க்க

திருப்பதி கோயில்: 121 கிலோ தங்க ஆபரணங்கள் நன்கொடை; யார் இந்த வர்தமான் ஜெயின்?

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) ஒரே பக்தரிடமிருந்து சுமார் ரூ.206 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்படுகிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு தனி நபரால் கோயிலுக்கு வழங்கப்படும்... மேலும் பார்க்க

டேட்டிங் செயலி: காதலைதேடி இந்தியா வந்த கனடா பெண்; உண்மை வயது தெரிந்து அதிர்ந்த இளைஞர்! நடந்தது என்ன?

கனடாவைச் சேர்ந்த 61 வயதுப் பெண்மணி ஒருவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நிதின் என்ற நபருடன் பழகத் தொடங்கினார். நாளடைவில் இவர்களின் நட்பு சம... மேலும் பார்க்க

`கரீனா கபூர் அணிந்த 200 ஆண்டு பழமையான மரகத நெக்லஸ்' - திருக்குர்ஆன் வசனம் இடம்பெற்றதால் சர்ச்சை!

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் தீபாவளி பண்டிகையையொட்டி அணிந்திருந்த ஆபரணம் ஒன்று, மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தின் போது, பாரம்பரிய உடையண... மேலும் பார்க்க

9-ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்; ரூ2.30 கோடியில் BMW காரை பரிசளித்த தந்தை!

Wமேற்கு வங்க மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கல்சி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சம்சுதீன் மித்யா. இவரது மகன் முகமது தல்ஹா, 9-ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் சிறந்த விளங்கும் தல்ஹா, ந... மேலும் பார்க்க

Gen Z Baba: `பாலியல் அத்துமீறல் செய்கிறார்கள்' - வைரல் ஜென் ஸீ பாபா மனவேதனை!

உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவனத்தைச் சேர்ந்தவர் ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ சாஷ்வத் (19). இளம் வயதிலேயே ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றி வரும் இவரை, இணையவாசிகள் பலர் 'ஜென் ஸீ பாபா' (Gen Z Baba) என்று செல்... மேலும் பார்க்க