செய்திகள் :

திருத்தணி: "எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாதா?" - சந்தோஷ் நாராயணன்

post image

திருத்தணியில் வடமாநில இளைஞர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை அதிரச் செய்தது.

இந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்கள் கண்டனத்தையும், கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், நடிகரும், பா.ஜ.க. தேசிய பொதுக் குழு உறுப்பினருமான சரத்குமார், ``திருத்தணியில் 34 வயதான வடநாட்டு இளைஞர் சூரஜ் என்பவரை 17 வயதுடைய நான்கு இளைஞர்கள் ஓடும் ரயிலில் அரிவாள் காட்டி மிரட்டி ரீல்ஸ் எடுத்திருக்கின்றனர்.

அந்த இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குரிய செயல். சமூக வலைதள மோகத்தால் மிருகத்தனமான போக்கிற்கு மனித சமூகம் மாறி வருவது வெட்கக்கேடானது.

வட மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டால் கொந்தளிப்பவர்கள், இன்று தமிழகத்தில் வட மாநில இளைஞருக்கு நேர்ந்த அவலம் இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அவப்பெயரை உண்டாக்கியதைக் கண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

சரத்குமார்
சரத்குமார்

சமூக குற்றங்களைக் கூட சாதாரணமாகச் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யலாம் என்ற நிலை உள்ள சூழலில், மக்கள் மத்தியில் வைரல் ஆக வேண்டும் என்று இப்படி வெறி பிடித்திருக்கிறார்கள்.

அந்த வெறியை முறியடிக்கவும், சமூக சீர்கேட்டு குற்றத்தின் அடிப்படையான போதைப்பொருள் ஊடுருவலை முற்றிலும் ஒழித்திட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

மேலும், குற்றவாளிகள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்ற பாரபட்சம் காட்டி அவர்களை சிறார் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பாமல், கடுமையான தண்டனையாக மரண தண்டனை வழங்கினால் மட்டுமே மக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என்ற அடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

அதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன் எக்ஸ் பதிவில், ``கடந்த பத்தாண்டுகளாக நான் சென்னையில் வசித்து வரும் பகுதி, குறிப்பாக இரவில், போதைப்பொருட்களுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது.

எனது ஸ்டுடியோ தளத்தில் பணிபுரியும் பல அப்பாவி கட்டுமானத் தொழிலாள நண்பர்கள் பலமுறை தாக்கப்பட்டிருக்கின்றனர்.

அதுபோன்றதொரு சம்பவத்தின்போது கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன், அதீத போதையில் இருந்தான். காவல்துறை அதிகாரி அவனை தடியால் அடித்தபோதுகூட எந்த வலியும் இல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தான். இதுபோன்ற தாக்குதல் நடத்துபவர்களில் பெரும்பாலானோர் இனவெறியர்களாக இருக்கின்றனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களைக் கண்மூடித்தனமாக வெறுத்துத் தாக்குகிறார்கள்.

பல உள்ளூர் அரசியல் பிரிவுகளும், பல சாதி அடிப்படையிலான குழுக்களும், இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக ஓடி வருகின்றனர். இந்தச் சம்பவங்களின் எதார்த்ததை நாம் ஏற்றுக்கொண்டு, இன்னும் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாதா?

திரையில் சித்தரிக்கப்படும் வன்முறைக்கும், சமீபத்தில் நடந்ததைப் போன்ற நிஜ சம்பவங்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. நான் உட்பட நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கோவை: 'ஜி.டி. நாயுடு மேம்பாலம், செம்மொழி பூங்கா, வழிதவறிய யானை' - ஜூலை டூ டிசம்பர் I Photo Flashback

ஜூலை 2025 - அதிமுக பொதுச்செயலாளரின் பிரச்சார பயணம் தொடக்கம் ஜூலை 2025 - தொடர் மழையினால் முழுகொள்ளளவை எட்டிய ஆழியார் அணை அக்டோபர் 2025 - தமிழகத்தை நீளமான முதல் மேம்பாலம் ஜீ .டி நாயுடு பாலம் என பெயர் வை... மேலும் பார்க்க

Rewind 2025: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் டு 40 ஆண்டுக்கால கேமரூன் அதிபர்| உலக நாடுகளில் தேர்தல்கள்

2025-ம் ஆண்டு பல நாடுகளில் தேர்தல்கள் நடந்துள்ளன. சில நாடுகளில் வழக்கமான தேர்தல்களைத் தாண்டி, ராஜினாமா, போராட்டங்களுக்குப் பிறகு தேர்தல்கள் நடந்துள்ளன. ஜனவரி: > இந்த ஆண்டின் முதல் மாதம் பெலரஸில் (ஐ... மேலும் பார்க்க

"எங்கள் தோழமை கட்சிகள் உட்கட்சி விவகாரத்தில் பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம்"- செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சியின் தரவுகள் பகுப்பாய்வுப் பிரிவு தலைவரும் ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி, தனது எக்ஸ் தளப்பக்கத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தை விட தமிழகம் அதிக கடன் வாங்குவதாக கருத்து ... மேலும் பார்க்க

Epstein files: அமெரிக்காவையும் மேற்குலகையும் உலுக்கிய எப்ஸ்டீன் விவகாரம் இதுவரை! - முழு விவரம்!

முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன்மணிவண்ணன் திருமலை(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்... மேலும் பார்க்க

கோவை: 'TNPL, யானைக்குத் தண்ணீர் சிகிச்சை, கேஸ் லாரி விபத்து' - ஜனவரி டூ ஜூன் 2025 | Photo Flashback

ஜனவரி 2025 - கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதுபிப்ரவரி 2025 - கோவையில் புதிய பா.ஜ.க அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்பிப்ரவரி 2025 - வன... மேலும் பார்க்க

JACTO-GEO: "பணிநிரந்தரம் செய்தால் பாராட்டு; ஏமாற்றினால் போராட்டம்" - பகுதிநேர ஆசிரியர்கள் எச்சரிக்கை

"திமுக அளித்த வாக்குறுதியின்படி வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிக்குள் முதல்வர் அறிவித்தால் பாராட்டுவோம். இந்த முறையும் ஏமாற்றினால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களும் கலந்துகொள்வோம்" என்று தமிழ... மேலும் பார்க்க