செய்திகள் :

திருத்தணி: வடமாநில இளைஞர் தாக்குதல் சம்பவத்தில் நடந்தது என்ன?- ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்

post image

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் குரல் கொடுத்திருந்தனர்.

இன்று இயக்குநர் மாரி செல்வராஜ் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Represental Images
Represental Images

இந்நிலையில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

“டிசம்பர் 27 ஆம் தேதி திருத்தணியில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. ரயிலில் வட மாநிலத்தவர் தாக்கப்பட்டார் எனக் கூறப்படுவது தவறு. முறைத்து பார்த்ததால் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர், புலம்பெயர் தொழிலாளி இல்லை அவர், 2 மாதங்களாக பல இடங்களுக்கு சென்றுள்ளார். ஒடிசாவை சேர்ந்தவர் அவர்.

சென்னையில் இருந்து திருத்தணிக்கு இளைஞர் சென்ற நேரத்தில் 4 சிறுவர்கள் உடன் இருந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் நேற்று முன்தினம்( டிச.28) கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர் நலமுடன் இருக்கிறார். சொந்த ஊருக்கு செல்லும் போது தாக்குதல் நடந்துள்ளது. சிறுவர்களிடம் இருந்து 2 பட்டாக்கத்தி, மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பட்டாக்கத்தியால் தாக்கி அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் சிறுவர்கள் மீது அதிகபட்ச தண்டனை கிடைக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரயிலில் இருந்த 4 சிறுவர்களில் 3 பேர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவரை நீதிபதியின் அறிவுரைப்படி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்.

ஐஜி அஸ்ரா கர்க்
ஐஜி அஸ்ரா கர்க்

ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ கஞ்சா கடந்த 6 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்டது. 10 மாத்திரை பிடிபட்டாலும் மெயின் சப்ளையரை தேடி செல்வோம்.

போதைப்பொருள் பயன்படுத்துவதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் வரும் ரீல்ஸ்களை கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.சைபர் கொள்ளைஅந்த லிங்கை திறந... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து திரும்பும் இளம்பெண்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில் பாலக்காடு தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னா... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரௌடி கொலை - அதிகாலையில் வந்த `ஹெல்மெட்' மர்ம நபர்கள் யார்?

சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாள... மேலும் பார்க்க

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந... மேலும் பார்க்க

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப ... மேலும் பார்க்க