செய்திகள் :

திருப்பரங்குன்றம்:``கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை UAPA-வில் கைது செய்யவேண்டும்" - திருமாவளவன்

post image

திருப்பரங்குன்ற மலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆர்.டி.ஓ தகவலின் படி மலை உச்சியில் இருக்கும் சர்வே கல்லில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்து அமைப்பான இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த ஆண்டு திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இவ்வழக்கை விசாரித்த தனிநபர் அமர்வு நீதிபர் ஜி.ஆர்.சுவாமி நாதன், " கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம்" என்று கடந்த டிசம்பர் 1ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பே இருவர் அமர்வு நீதிபதிகள் வழக்கமான உச்சிப் பிள்ளையார் தீபத் தூணில் தீபமேற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் திருப்பரங்குன்ற மலையில், இந்து அமைப்பினர் மலை உச்சியில் இருக்கும் தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்தனர்.

இருப்பினும், திருப்பரங்குன்ற அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகத்தினர் மலை உச்சியில் இருக்கும் தூணில் மகா தீபம் ஏற்றாமல், வழக்கம்போல மலையில் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனால், இந்து அமைப்பினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்போது காவல்துறை, ஆர்ப்பாட்டக்காரர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முயன்ற காவலர்கள் மீது ஆர்ப்பாட்டக்காரார்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் அத்துமீறி உச்சி மலையை நோக்கி சென்றவர்களையும் காவல்துறை கட்டுப்படுத்தியது.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

இந்த விவகாரம் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய திருப்பரங்குன்றம் பொதுமக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தை விட்டு விட்டு, வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள். அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி சுமூகமான முறையில் தீபத் திருவிழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது.

இந்நிலையில் அங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வெளியூர்களில் இருந்து வந்த சனாதனப் பயங்கரவாதக் கும்பல், அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு பொதுச் சொத்துகளையும் நாசப்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அங்கு வன்முறையைத் தூண்டும் விதமாக தீபம் ஏற்றுவதற்குப் பயங்கரவாதிகளை அனுமதித்தது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாக உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியுள்ளார்.

இது அப்பட்டமான அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும். இப்படி சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதோடு, நேற்று முழுவதும் மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேவையில்லாத சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சனைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் குறி வைக்கும் 40 தொகுதிகள்; திமுக கூட்டணியில் எந்தெந்த இடங்களை எதிர்பார்க்கிறது?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், மாநிலத் தலைவர் செல்... மேலும் பார்க்க

`மே., வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவேன்; டிச.6-ல் அடிக்கல்' - தி.காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சு

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹிமாயூன் கபீர். அங்குள்ள பரத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர், திடீரென `மேற்கு வங்க மாநிலம், முர்ஜிதாபாத்தில் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர... மேலும் பார்க்க

பாமக: ``இதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது" - கட்சி விவகாரம் குறித்து நீதிபதிகள்

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையில், அன்புமணி பா.ம.க தலைவர் அல்ல என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின்படி நான்தான் பா.ம.க தலைவர் என தெரிவித்தார்... மேலும் பார்க்க

SIR: ``குழப்பத்துக்கெல்லாம் முதல்வர்தாங்க காரணம்!'' - சாடும் பாஜக; பதிலடி திமுக!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீ... மேலும் பார்க்க

செங்கோட்டையன், சின்னசாமி, அடுத்தடுத்து கட்சி மாறும் சீனியர்கள்; கொங்கு மண்டலத்தில் திணறும் அதிமுக?

சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் என்றாலே அரசியல் புள்ளிகளின் கரைவேட்டிகள் மாறுவது இயல்பு தான். அப்படி அடுத்தடுத்த கட்சி தாவல்களால் கொங்கு அரசியல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. அதிம... மேலும் பார்க்க