செய்திகள் :

`மே., வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவேன்; டிச.6-ல் அடிக்கல்' - தி.காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சு

post image

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹிமாயூன் கபீர். அங்குள்ள பரத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர், திடீரென `மேற்கு வங்க மாநிலம், முர்ஜிதாபாத்தில் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை கட்டப் போகிறேன். இதற்கு பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதி அடிக்கல் நாட்டப்படும்' என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இது குறித்து பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான திலிப் கோஷ் அளித்த பேட்டியில், ''மக்கள் தங்களது சொந்த நிலத்தில் கோயில் அல்லது மசூதி போன்ற வழிபாட்டுத்தலங்களை கட்டிக் கொள்ளலாம்.

ஆனால் பாபர் பெயரில் எந்த கட்டடமும் கட்டக் கூடாது. அவருக்கு எதிராக இந்து சமுதாயம் 450 ஆண்டுகள் போராடி அவரது கட்டடத்தை இடித்துவிட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டி இருக்கின்றது. பாபர் ஒரு ஆக்கிரமிப்பாளர். அவர் பெயரில் இந்தியாவில் எதுவும் செய்யக் கூடாது'' என்றார்.

பாபர் மசூதி இடிப்பு

மேற்கு வங்க பா.ஜ.க செயலாளர் பிரியங்கா இது குறித்து கூறுகையில், ''கபீரின் கருத்து முஸ்லிம்களை திருப்தி படுத்தும் செயலாகும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற கொள்ளை குறிப்பிட்ட மதம் சார்ந்ததாக இருக்கிறது. எப்போது அவர்கள் பாபர் மசூதியை கட்டுவேன் என்று சொன்னார்களோ அப்போதே அதனை யார் கட்டச் சொன்னார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

பாபர் எங்கிருந்து வந்தாரோ அங்கே அவருக்கு மசூதி கட்டுங்கள். ரோஹின்யாஸ் மக்கள் இப்போது வாக்காளர் திருத்த பணிகளால் எல்லைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார். காங்கிரஸ் கட்சியும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்ச்சையானதை தொடர்ந்து எம்.எல்.ஏ.ஹிமாயூன் கபீர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கொல்கத்தா மேயர் ஹகிம் வெளியிட்டுள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜி, செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் ஒப்புதலோடு அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

``திடீரென எங்களது கட்சி எம்.எல்.ஏ.பாபர் மசூதி கட்டப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

நாங்கள் அவரை ஏற்கனவே எச்சரித்து இருக்கிறோம். நாங்கள் மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுடையவர்கள்.'' என்று கட்சி தலைமை கூறியிருக்கிறது. அதேசமயம் ஹிமாயூன் கபீர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், பாபர் மசூதி கட்டப்போவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் குறி வைக்கும் 40 தொகுதிகள்; திமுக கூட்டணியில் எந்தெந்த இடங்களை எதிர்பார்க்கிறது?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், மாநிலத் தலைவர் செல்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்:``கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை UAPA-வில் கைது செய்யவேண்டும்" - திருமாவளவன்

திருப்பரங்குன்ற மலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்த... மேலும் பார்க்க

பாமக: ``இதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது" - கட்சி விவகாரம் குறித்து நீதிபதிகள்

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையில், அன்புமணி பா.ம.க தலைவர் அல்ல என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின்படி நான்தான் பா.ம.க தலைவர் என தெரிவித்தார்... மேலும் பார்க்க

SIR: ``குழப்பத்துக்கெல்லாம் முதல்வர்தாங்க காரணம்!'' - சாடும் பாஜக; பதிலடி திமுக!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீ... மேலும் பார்க்க

செங்கோட்டையன், சின்னசாமி, அடுத்தடுத்து கட்சி மாறும் சீனியர்கள்; கொங்கு மண்டலத்தில் திணறும் அதிமுக?

சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் என்றாலே அரசியல் புள்ளிகளின் கரைவேட்டிகள் மாறுவது இயல்பு தான். அப்படி அடுத்தடுத்த கட்சி தாவல்களால் கொங்கு அரசியல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. அதிம... மேலும் பார்க்க

புகையிலை பொருள்களுக்கு மீண்டும் வருகிறது `கலால் வரி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், இந்தியாவில் 'GST 2.0' நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன் கீழ், அதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு ஸ்லாப்களாக இருந்த வரி, 5% மற்றும் 18% ஸ்லாப்களாக குறைக்கப்பட்டது. எலெக்... மேலும் பார்க்க