செய்திகள் :

SIR: ``குழப்பத்துக்கெல்லாம் முதல்வர்தாங்க காரணம்!'' - சாடும் பாஜக; பதிலடி திமுக!

post image

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ரிப்பன் பில்டிங்கில் சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்திருந்தது.

சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் குமரகுருபரன்
சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் குமரகுருபரன்

கூட்டத்தின் முடிவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,

"தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் வாக்காளர்களின் பெயரும் சென்னையில் தொகுதிக்கு 40000 வாக்காளர்களின் பெயரும் நீக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

20 வருடமாக இந்த வாக்காளர்களின் பெயரில் வாக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போதுதான் நீக்கியிருக்கிறார்கள்." எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு கலந்துகொண்டார். அவர் பேசுகையில், 'ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து SIR பெயரில் மோசடி செய்து வாக்குத்திருட்டில் ஈடுபடுகிறது.

நேற்று வரை 99% பேருக்கு விண்ணப்பம் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், 60% பேரின் விவரங்களை மட்டும்தான் இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள்.

திமுக கொடுத்த நெருக்கடியால்தான் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்திருக்கிறார்கள்.

ஜெயக்குமார், கராத்தே தியாகராஜன்
ஜெயக்குமார், கராத்தே தியாகராஜன்

ஒரு மாதமாகியும் SIR குறித்து அதிகாரிகளுக்கே தெளிவு இல்லை. ஒரு வாரமாக மழை பெய்து மக்கள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது. இந்த ஒரு வார இழப்பை எப்படி ஈடு செய்யப்போகிறார்கள்?

திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ஆதாரமும் இல்லை.

இடப்பெயர்வு மற்றும் இறந்தவர்களுக்கான விண்ணப்பத்தை கொடுப்பதில் BLO -க்களே குழம்புகிறார்கள்.' என்றார்.

``வட நாட்டவரை தமிழ்நாட்டுக்குள் புகுத்த பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து சதி செய்கிறது.

திமுக அரசுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலேயே இந்த நடைமுறையை செய்திருக்கின்றனர்.'' என காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட நவாஸ் என்பவர் பேசியிருந்தார்.

S.I.R ஆலோசனைக் கூட்டம்
S.I.R ஆலோசனைக் கூட்டம்

பா.ஜ.க சார்பில் கராத்தே தியாகராஜன் கூட்டத்துக்கு வந்திருந்தார். அவர், "SIR குழப்பத்துக்கே மயிலாப்பூரை சேர்ந்த ஒரு வாக்காளர்தான் காரணம். அந்த விண்ணப்பத்தை காண்பித்து குழப்பமாக இருக்கிறது என வீடியோ போட்ட பிறகுதான் மக்களுக்கு குழப்பமே ஏற்பட்டது. அவர்தான் முதலமைச்சர்.

அவருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என தேர்தல் அலுவலரிடம் முறையிட்டேன்" என்றார்.

பாமக: ``இதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது" - கட்சி விவகாரம் குறித்து நீதிபதிகள்

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையில், அன்புமணி பா.ம.க தலைவர் அல்ல என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின்படி நான்தான் பா.ம.க தலைவர் என தெரிவித்தார்... மேலும் பார்க்க

செங்கோட்டையன், சின்னசாமி, அடுத்தடுத்து கட்சி மாறும் சீனியர்கள்; கொங்கு மண்டலத்தில் திணறும் அதிமுக?

சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் என்றாலே அரசியல் புள்ளிகளின் கரைவேட்டிகள் மாறுவது இயல்பு தான். அப்படி அடுத்தடுத்த கட்சி தாவல்களால் கொங்கு அரசியல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. அதிம... மேலும் பார்க்க

புகையிலை பொருள்களுக்கு மீண்டும் வருகிறது `கலால் வரி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், இந்தியாவில் 'GST 2.0' நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன் கீழ், அதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு ஸ்லாப்களாக இருந்த வரி, 5% மற்றும் 18% ஸ்லாப்களாக குறைக்கப்பட்டது. எலெக்... மேலும் பார்க்க

மூன்று `செக்’குகளும் பவுன்ஸ்; பிடிவாரண்ட் போட்ட நீதிமன்றம்! – அலறியடித்து ஆஜரான புதுச்சேரி அமைச்சர்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலை அமுதன். 60 வயதான இவருக்கும், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அமைச்சரும், என்.... மேலும் பார்க்க

கே.டி.ராகவனுக்கு விரைவில் தேசியப் பதவி? டு செங்கோட்டையனுக்கு புது அசைன்மென்ட்! | கழுகார் அப்டேட்ஸ்

சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்!கிரிஷ் சோடங்கர் பெயரில் வசூல்...தமிழக காங்கிரஸில் புதிய மாவட்டத் தலைவர் நியமனங்களில்,வைட்டமின் ‘ப’ சகட்டுமேனிக்கு விளையாடுகிறதாம்.தமிழக காங்கிரஸ்,அமைப்புரீதியாக74மாவட்ட... மேலும் பார்க்க

புதின் : இன்று இந்தியா வருகிறார்; எதிர்பார்ப்புகள் என்ன?இந்தியாவின் கணக்கு என்ன? | Explained

இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். இன்றும், நாளையும் அவர் இந்தியாவில் இருக்கப்போகிறார்.ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த... மேலும் பார்க்க