ஜெர்மனி: 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ; அதிர்ச்சியில் காவல்துறை - என்ன நடந...
திருப்பூர்: ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை, கொலை - பைக் மெக்கானிக் சிக்கியது எப்படி?
ஈரோடு மாவட்டம் நம்பியூர் லாகம்பாளையம் பகுதியில் கணவருடன் வாழ்ந்து வந்தவர் 39 வயதான ஜானகி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் நடராஜ் உயிரிழந்த காரணத்தால், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகில் உள்ள சேவூர் பகுதியில் தந்தை வீட்டில் மகளுடன் வசித்து வந்துள்ளார். கால்நடை வளர்ப்பு மூலம் வாழ்வாதாரத்தை நடத்தி வந்திருக்கிறார். கடந்த 4- ம் தேதி ஆடுகளை வழக்கம் போல மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற ஜானகி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. தந்தை பழனிசாமி ஜானகியைத் தேடிச் சென்றுள்ளார். அருகில் இருந்த விளைநிலம் ஒன்றில் ஜானகியின் ஆடைகள் களையப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த தந்தை பழனிசாமி, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஜானகியின் உடலை மீட்ட காவல்துறையினர், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்திருப்பதை உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குட்டகம் பகுதியில் பைக் மெக்கானிக் தொழிலில் ஈடுபட்டு வந்த 36 வயதான செந்தில்குமார் என்ற நபரை கைது செய்துள்ளனர்.
பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், " இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தோம். இந்த பகுதியில் பைக் மெக்கானிக் தொழிலில் ஈடுபட்டு வந்த ஈரோடு மாவட்டம் திங்களூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினோம். ஜானகி தனியாக ஆடு மேய்க்கச் செல்வதை நோட்டம் விட்டு அன்றைய தினம் பின்தொடர்ந்து சென்ற செந்தில்குமார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறான். ஜானகி கூச்சலிட்டதால் தலையில் கைல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பிச் சென்றிருக்கிறான் என்பது உறுதியானது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் யாருக்கும் தெரியாது என்கிற தைரியத்தில் இருந்துள்ளான். பகல் நேரங்களில் இந்த பகுதியில் அதிகம் நடமாடும் நபர்கள் குறித்து உள்ளூர் மக்களிடம் தொடர்ந்து விசாரித்து வந்தோம். செந்தில்குமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதாக என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.















