செய்திகள் :

திருப்பூர்: காவலரைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம்; "போதை அல்ல; மனநலம் பாதிக்கப்பட்டவர்" - ஆணையர்

post image

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் அரிசிக் கடை வீதி வீரராகவப் பெருமாள் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்காக அதிகளவில் வந்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு படுத்திருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ராமகிருஷ்ணனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த காவலர் ராமகிருஷ்ணன் மர்ம நபரை விரட்ட முயன்றபோது, ஆத்திரமடைந்த அந்நபர் தான் வைத்திருந்த அரிவாளால் அவரைத் தாக்க முயன்றுள்ளார். காவலர் ராமகிருஷ்ணன் தான் அணிந்திருந்த பெல்ட்டைக் கழற்றி சுழற்றியபடி தற்காப்புக்காக அந்நபரிடம் தப்ப முயன்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சத்தமிடவே அருகில் பணியிலிருந்த காவலர்கள் அந்த மர்ம நபரிடம் பேச்சு கொடுத்து அவரை மடக்கிப் பிடித்தனர். இதில் அந்த நபர் போதையிலிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக அந்நபரை போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

காவலர் ராமகிருஷ்ணன்
காவலர் ராமகிருஷ்ணன்

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தச் சம்பவத்தில் பொதுமக்களை ஆபாசமாகப் பேசிய நபரைத் தடுக்க முயன்றபோது கத்தியை வைத்து காவலரைத் தாக்க முயன்றுள்ளார். அவர் மதுபோதையில் இல்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்போல தெரிவதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2020-இல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு வாகனத்தைச் சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளார். அவர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த இளங்கோ என்பது தெரியவந்துள்ளது. பழைய வழக்கை வைத்தே இந்தத் தகவலைப் பெற்றோம். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

கோயில் திருவிழாவின்போது, காவலர் ஒருவரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை: திடீர் சோதனை... கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்... மேலும் பார்க்க

சென்னை: செக்ஸ் டார்ச்சர்; மர்ம உறுப்பை வெட்டி இளைஞர் கொலை - சிறுவனுடன் கைதான தோழிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரக்சிகா என்பவரைக் காதலித்தார். ஆனால் இவர்களுக்குள் கருத்துவ... மேலும் பார்க்க

வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா?

வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பீஜியன் என்பவர் தங்கி இருந்த வீ... மேலும் பார்க்க

சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?

சென்னை ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இவர் அதிமுக சைதை மேற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். 16-ம் தேதி பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சேர்ந... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொ... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் விஷம் அருந்தி தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் பெர... மேலும் பார்க்க