செய்திகள் :

`திருமணம் செய்ததாகக்கூறி தப்ப முடியாது' - சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

post image

கேரள மாநிலம் ​பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு பகுதியில் 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, 27 வயது இளைஞர் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு மன்னார்க்காடு போலீஸார் போக்ஸோ வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கு பட்டாம்பி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கின் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டை நாடினார் மனுதாரரான இளைஞர். அதில் அச்சிறுமி தனது மனைவி என்றும், இஸ்லாமிய முறைப்படி தங்களுக்குத் திருமணம் நடந்து முடிந்துவிட்டது என்றும் இளைஞர் வாதிட்டார்.

மேலும், 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை வரம்பிற்குள் வராது என்ற இந்திய தண்டனைச் சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது தரப்பு வாதமாக முன்வைத்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோபின் செபாஸ்டியன், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கேரள உயர்நீதிமன்றம்

நீதிபதி வழங்கிய உத்தரவில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டம், தனிநபர் சட்டங்களை விட மேலானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். முந்தைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்த நீதிமன்றம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக இயற்றப்பட்ட போக்சோ சட்டம் ஒரு சிறப்புச் சட்டமாகக் கருதப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது. இச்சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட அனைவருமே குழந்தைகளாக கருதப்படுவார்கள், அவர்கள் திருமணமானவர்களா இல்லையா என்பது இங்கு முக்கியமல்ல எனவும் தெளிவுபடுத்தியது.

போக்சோ சட்டம்

மனைவிக்கு 15 வயது பூர்த்தியாகியிருந்தால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்ற முந்தைய இந்திய தண்டனைச் சட்டத்தின் விதியை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே திருத்தியுள்ளது. 'இன்டிபென்டன்ட் தாட்' வழக்கின் தீர்ப்பின்படி இந்த வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ​எனவே, மனுதாரர் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது முதற்கட்ட விசாரணையிலேயே தெரியவருகிறது எனக் குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், பட்டாம்பி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையைத் தொடரலாம் எனவும் உத்தரவிட்டது.!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க