செய்திகள் :

திருவள்ளூர்: குடிக்கத் தண்ணீர் கேட்ட வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை - மூவரிடம் போலீஸ் விசாரணை!

post image

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் பகுதியில் உள்ள ராமராஜன் கண்டிகை கிராமத்தில் பெண் ஒருவர் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் வீட்டின் வெளிபக்க இரும்பு கேட்டை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தட்டியிருக்கிறார். அதனால் வெளியில் வந்து பார்த்த பெண், என்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு இளைஞர், பேசியது அந்தப் பெண்ணுக்கு புரியவில்லை. மேலும் இளைஞரின் கையில் கத்தியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த பெண், உடனடியாக தன்னுடைய உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்ததோடு வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கிறார். ஆனால் அந்த இளைஞரோ இரும்பு கேட்டை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருந்திருக்கிறார்.

கொலை
கொலை

இந்தச் சமயத்தில் பெண்ணின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள், வடமாநில இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது சிலர் வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். இதில் வடமாநில இளைஞர், மயங்கி விழுந்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதைத் தொடர்ந்து வெங்கல் காவல் நிலையத்துக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வடமாநில இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து வடமாநில இளைஞரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீஸார், கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முதற்கட்டமாக பெண்ணின் உறவினர்கள் மூன்று பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து வெங்கல் போலீஸார் கூறுகையில், ``புலம் பெயர்ந்த வடமாநில இளைஞரின் பெயர் பிரசங்கிதாஸ் (35). இவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். வேலைத் தேடி அவர் இங்கு வந்திருக்கிறார். அப்போது அவர் தண்ணீர் கேட்டு அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார். மொழி தெரியாததால் இந்த அசம்பாவித சம்பவம் நடந்திருக்கிறது. தொடர்ந்து வடமாநில இளைஞரின் கொலைக்கு காரணமானவர்களிடம் விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க