செய்திகள் :

திருவள்ளூர்: "விஜய் ஒரு நல்ல நடிகர்; அவ்வளவுதான் தெரியும்" - நடிகை நளினி

post image

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வி.ஜி. ராஜேந்திரனை ஆதரித்து, பிரபல நடிகை நளினி இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை நளினி, "அண்ணன் வி.ஜி. ராஜேந்திரன் அவர்கள் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனப் பலர் சொல்கிறார்கள். ஆனால், அவர் செய்த நற்பணிகளுக்காக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார் என்று நான் நம்புகிறேன். அவர் சொன்னதை விடவும் அதிகமாக மக்களுக்காகச் செய்திருக்கிறார்.

நடிகை நளினி
நடிகை நளினி

நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் என்னை அவரின் தங்கை போலவே பாவித்து அன்புடன் வரவேற்கிறார்கள். அந்த அன்புதான் எங்களின் வெற்றியை உறுதிப்படுத்தும்" என்றார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "அவர் ஒரு நல்ல நடிகர் என்பது மட்டுமே எனக்குத் தெரியும், மற்றபடி அவர் அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது" எனச் சுருக்கமாகப் பதிலளித்தார்.

எப்போதும் அதிமுக மேடைகளில் மட்டுமே முழங்கி வந்த நடிகர் ராமராஜன், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் விபின் சக்கரவர்த்தியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

'4 மணிக்கு முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணையுங்கள்...' - பிரஷர் போடும் திமுக; குழப்பத்தில் அஜிதா!

முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடிக்குச் செல்லவிருக்கிறார். அதற்குள் தவெக நிர்வாகி அஜிதாவை திமுக முகாமுக்கு இழுத்து முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணைத்து விட வேண்டுமென ஒரு டீம் தீவி... மேலும் பார்க்க

பேச்சுவார்த்தை தோல்வி: "ஈரானுக்கு கெட்ட செய்தி; ஆனாலும் ஒரு நல்ல செய்தி" - அமெரிக்கா சொல்வது என்ன?

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசியதாவது..."எங்களுடைய நிபந்தனைகளை ஈரான் ஒத்துக்கொள்ளவில்லை. ... மேலும் பார்க்க

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: 21 மணி நேரம் நடந்தும் கைக்கூடாதது ஏன்? Quick Points

கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கிய போர், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை எட்டும் என்று உலகமே நினைத்திருந்தது.ஆனால், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வா... மேலும் பார்க்க

பாலக்கோடு: கே.பி.அன்பழகனுக்கு டாக்டர் செந்தில்குமாருக்குப் போட்டி எப்படி இருக்கு? களநிலவரம் என்ன?

ஐந்து முறை தொடர்ந்து வெற்றிபெற்று ஆறாவது முறையாக பாலகோட்டில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிராக, முன்னாள் எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமாரை தி.மு.க நிறுத்தியுள்ளது.கே.பி.அன்பழகன்... மேலும் பார்க்க

பாஜக பூத் கமிட்டி: "தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்" - மோடி பாராட்டு; காரணம் என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம் தீவிரமாகியிருக்கிறது.தமிழ்நாட்டில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூ... மேலும் பார்க்க

”ஐந்து தொகுதிகள் இலக்கு” - தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி, தினகரன் இணைந்து செய்த பிரசாரம் எடுபடுமா?!

தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அப்போது அதிமுகவிலிருந்த வைத்திலிங்கம் தனது தனிப்பட்ட செல்வா... மேலும் பார்க்க