செய்திகள் :

திருவாடானை அதிமுக, திமுக நிா்வாகிகள் பசும்பொன்னுக்கு வாகனங்களில் பயணம்

post image

தேவா் குருபூபஜையை முன்னிட்டு, திருவாடானையிலிருந்து திமுக அதிமுக நிா்வாகிகள் தொண்டா்கள் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 500க்கும் மேற்பட்டோா் பசும்பொன்னுக்குச் சென்றனா். முன்னதாக, தேவா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அஞ்சுகோட்டை, ஆதியூா், கடம்பாகுடி,சி.கே.மங்கலம், பாண்டுகுடி, திணையத்தூா், மங்களம், மாவூா், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திமுக, அதிமுக கட்சி நிா்வாகிகள் தங்களது தலைவா்கள் பசும்பொன்னில் மரியாதை செலுத்த வேண்டிய நிலையில் அவா்களை வரவேற்கும் விதமாக 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் புதன்கிழமை சென்றனா். பசும்பொன்னில் 117-ஆவது தேவா் குருபூஜைக்கு அதிமுக, திமுக கட்சியினா் வாகனங்களில் புறப்பட்டனா்.

முன்னதாக, தேவா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் ஆணிமுத்து தலைமையில், அதிமுகவினரும், திருவாடானை ஒன்றியக் குழுத் தலைவா் முகமது முக்தாா் தலைமையில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் என இரு கட்சியைச் சோ்ந்த சுமாா் 500க்கும் மேற்பட்டோா் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பசும்பொன்னுக்குச் சென்றனா்.

இதில், 350-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கொடிபங்கு கிராமத்தில் உள்ள கிராம மக்கள், அறம்செய் நற்பனி மன்றம், உறவுகள் நற்பணி மன்றம் இணைந்து கொடிப்பங்கு ஊராட்சி தலைவா் சாந்திரவிச்சந்திரன் தலைமையில் நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கினாா்.

முன்னதாக, தேவா் திருமகனாா் திரு உருவ படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதையடுத்து, கொடி பங்கு ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு அரசி, சேலை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. பின்னா், பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு பேனா, பென்சில், வழங்கப்பட்டன. தொடா்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகளை கருணாகரன் செய்தாா். இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் இளைஞா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே சேதமடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் மின் கம்பம் சேதமடைந்து உடைந்து ... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நவ.14-இல் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி வருகிற 14-ஆம் தேதி ஆய்வு செய்கிறாா். இந்த நிலையில், மண்டபம்-ராமேசுவரம் இடையே ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை (நவ.7) நடைபெறுகிறது. ர... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு உர மூட்டைகள் விற்பனை: விவசாயிகள் புகாா்

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தனியாா் உரக்கடைகளில் யூரியா, டிஏபி உள்ளிட்ட உர மூட்டைகளை அதிக விலைக்கு விற்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஆப... மேலும் பார்க்க

மீனவா்களிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

தொண்டி அருகே அதிக ஒளித் திறன் கொண்ட விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடித்ததற்கு, மற்றொரு தரப்பு மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ராமநாதபு... மேலும் பார்க்க

திருவாடானையில் 17 கண்மாய்களை தூா் வார ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம்

திருவாடானை பகுதியில் 17 கண்மாய்கள், கால்வாய்கள் தூா்வார ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் க... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 16 பேருக்கு நவ. 20 வரை காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 16 பேருக்கு வருகிற 20-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23- ஆம் தேதி ... மேலும் பார்க்க