செய்திகள் :

தி.மலை: பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் அட்டூழியம்; பணம் பறிப்பு - 8 பேர் கும்பல் சிக்கிய பின்னணி

post image

வைகாசி மாத பௌர்ணமி கடந்த 30-ம் தேதி தொடங்கி, மறுநாள் மதியம் நிறைவடைந்தது. 30-ம் தேதி இரவு, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண், தன் நண்பர்களுடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் செங்கம் வழியாக தருமபுரி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். பெரியகோளாப்பாடி கிராமத்திலுள்ள பாறை அருகே சென்றபோது, வண்டியை நிறுத்திவிட்டு நண்பருடன் அந்தப் பெண் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாகவந்த மர்மநபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, காட்டுக்குள் அழைத்துச் சென்று, அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கின்றனர்.

மேலும், அந்த பெண்ணின் ஆடைகளையும் களைந்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் செயினையும் பறித்துக்கொண்டு துரத்தியடித்திருக்கின்றனர். அந்தப் பெண் வீடு சென்று சேர்ந்ததும், 31-ம் தேதி மர்மநபர்கள் அவரை போன் மூலம் தொடர்புகொண்டு `ஒரு லட்சம் ரூபாய் வேண்டும். தரலைனா, உன்னோட நிர்வாண படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம்’ என மிரட்டியிருக்கின்றனர்.

பாலியல் தொந்தரவு (சித்தரிக்கப்பட்ட படம்)

இதையடுத்து, நான்காயிரம் ரூபாயை அந்த பெண் `கூகுள் பே’ மூலமாக அனுப்பிய நிலையிலும், மீதத் தொகையைக் கேட்டு அந்த கும்பல் மிரட்டியிருக்கிறது. இதனால், வேறு வழித் தெரியாமல் காவல்துறையின் அவசர உதவி அழைப்பு எண் `100’-ஐ தொடர்புகொண்டு தனக்கு நேர்ந்ததை தெரியப்படுத்தி பாதுகாப்பு கேட்டிருக்கிறார். இதையடுத்து, திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீஸார், அந்த பெண்ணை பாதுகாப்புடன் வரவழைத்து புகாரைப் பெற்று வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையில் இறங்கினர்.

இதேபோல, 31-ம் தேதி இரவு திருவண்ணாமலை மாநகராட்சிக்குஉட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், பியூட்டி பார்லரில் தனது பணியை முடித்துவிட்டு இரவில் கிரிவலம் சென்றிருக்கிறார். கிரிவலப் பாதை அடி அண்ணாமலை அருகே வந்தபோது, நடக்க முடியாததால், நண்பருக்கு போன் செய்து, தன்னை அழைத்துச் சென்று வீட்டில் விடும்படி கேட்டிருக்கிறார். அதன்பேரில், அவரின் நண்பர் கிரிவலப் பாதைக்கு வந்து இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள ஹோட்டலிலும் சாப்பாடு வாங்கிக்கொண்டு, அய்யம்பாளையம் பைபாஸ் பகுதியோரமாகச் சென்று சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அங்குவந்த மர்மகும்பல், அவர்களை மிரட்டி காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று தாக்கியதாகவும், இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல்ரீதியதாக தொந்தரவு செய்து, அவர் காதில் அணிந்திருந்த இரண்டு கிராம் தங்க கம்மலையும் பறித்துக்கொண்டதாகத் தெரிகிறது.

``மறுநாள் `கூகுள் பே’ மூலமாக பணம் அனுப்ப வேண்டும்’’ என மிரட்டி அனுப்பியதாகவும் கூறப்படும் நிலையில், வீட்டுக்குச் சென்ற இளம்பெண் தனது தந்தையிடம் அழுதபடி நடந்ததை கூறியிருக்கிறார். அவர் உடனடியாக, திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அடுத்தடுத்து பெறப்பட்ட ஒரே மாதிரியான இந்த இரண்டு வழக்குகளால் காவல்துறையினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். டி.எஸ்.பி ராஜன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மர்மநபர்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட கும்பல்

அதன்படி, திருவண்ணாமலை இளம்பெண் விவகாரத்தில் ஆடையூரைச் சேர்ந்த வாசு என்கிற வாசுதேவன், பெரிய பாலியப்பட்டைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் தமிழ் என்கிற தமிழரசன், அஸ்வநாதசுரணையைச் சேர்ந்த அப்பு, லேலே என்கிற ஹரிகரன், சர்மா, சேந்தமங்கலத்தைச் சேர்ந்த அருண்குமார், திருவண்ணாமலை பாலாஜி நகரைச் சேர்ந்த சிவகணேசன் என்கிற சூர்யா ஆகிய எட்டு பேர் அடையாளம் காணப்பட்டனர். அதேபோல, தருமபுரி பெண் விவகாரத்திலும் வாசுதேவன் தலைமையிலான இந்த கும்பலே ஈடுபட்டது தெரியவந்தது.

வாசுதேவன் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி எனக் கூறப்படுகிறது.

முக்கிய குற்றவாளியான வாசுதேவன் உள்ளிட்ட எட்டு பேரை போலீஸார் தேடிப்பிடித்து கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர். இவர்களிடமிருந்து ஆறு செல்போன்கள், மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். அந்த செல்போன்களில் பதிவான காட்சிகளை விசாரணைக்குஉட்படுத்தி வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவங்கள், திருவண்ணாமலையை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க