செய்திகள் :

'துண்டுச் சீட்டை பார்த்து வாசிக்கும் ரோபோ!' - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடும் ஆதவ் அர்ஜூனா

post image

TNPSC தேர்வு ரத்தான விவகாரம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்புப் போன்றவற்றை பற்றி தவெக-வின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.

ஆதவ்
ஆதவ்

அவர் பேசியதாவது, 'திமுகவின் தேர்தல் வாக்குறுதி 187 இல் ஐந்தரை லட்சம் அரசுப்பணிகளை உருவாக்குவோம் என்றனர். அப்படி பார்த்தால் 5 ஆண்டுகளில் 28 லட்சம் அரசுப்பணிகளை உருவாக்கியிருக்க வேண்டும்.

தமிழகத்தில் மது விற்பனையை விட கஞ்சா விற்பனை அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு பள்ளியிலும் கஞ்சா சுலபமாக கிடைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா மட்டுமே 60-70 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகிறது. கஞ்சாவை பயன்படுத்தும் நடிகர்களை கைது செய்கிறார்கள். ஆனால், கஞ்சா நெட்வொர்க்கை தொடுவதில்லை.

தெருத்தெருவாக விற்கப்படும் கஞ்சா நெட்வொர்க்கை பற்றி திமுக நிர்வாகிகளுக்கு தெரியாதா? கஞ்சா விற்பனை மூலம் வரும் பணத்தை திமுக தேர்தலுக்காக பயன்படுத்தப் போகிறது. ஒன்றிய அரசின் ஏஜென்சிகள் இதை விசாரிக்க வேண்டும்.

ஆதவ்
ஆதவ்

அரசுப்பணி குறித்து நிதியமைச்சர் சட்டமன்றத்தில் ஒரு கருத்தை சொல்கிறார். முதல்வர் ஒரு கருத்தை சொல்கிறார்.

சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வெறுமென விண்ணப்பங்கள் பெறும் அலுவலகங்களாக மட்டுமே உள்ளன. 30 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். அதில் 17 லட்சம் பேர் பெண்கள். தன்னுடைய பையனை துணை முதல்வராக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்களின் வலியெல்லாம் தெரியாது.

TNPSC தேர்வை கூட முறையாக நடத்த முடியாத நிர்வாக திறனற்ற அரசுதான் இது. தேர்வு எழுத வந்தவர்கள் அத்தனை பேருக்கும் இழப்பீடு கொடுக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் துண்டு சீட்டை கொடுத்து முதல்வரை பேச வைக்கிறார்கள். ஒரு ரோபோ முதல்வரைத்தான் நம் மாநிலம் கொண்டிருக்கிறது.

2021 இல் அதிமுக ஆட்சியிலிருந்து போன போது நான்கரை லட்சம் கோடி மட்டுமே கடன் இருந்தது. இப்போது தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது திராவிட மாடலா? கடன் மாடலா? கேள்வி கேட்டால் பத்திரிகையாளர்களை அடிக்கிறார்கள்.

ஆதவ்
ஆதவ்

நேற்று ரத்தான தேர்வுக்கும் கே.என்.நேரு மீது பதியப்பட்ட வழக்குதான் காரணமா? யாருமே பதில் சொல்லவில்லை. இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொண்டு துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.

கிரிஷ் சோடங்கர் என்கிற சுயமரியாதைமிக்க தலைவரை காங்கிரஸ் கூட்டணி பேச அனுப்பியிருக்கிறது. தவெகவின் வாக்கு வங்கி உயர்ந்திருப்பதும் திமுகவின் வாக்கு வங்கி குறைந்திருப்பதும் அவருக்கு தெரிகிறது. அதனால் அதிக சீட்களை கேட்கிறார். ஆனால், திமுக பேச்சுவார்த்தை குழுவை அமைக்காமல் அறிவாலய கதவை திறக்காமலேயே தாமதப்படுத்துகிறது.

எங்கள் தலைவர் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் உழைக்க தயாராக இருக்கிறார். தினமும் மக்களோடு மக்களாக நடக்க தயாராக இருக்கிறார். ஆனால், பிரசார வழிகாட்டு நெறிமுறைகள் என்ற ஒன்றை வெளியிட்ட திமுகவும் காவல்துறையும் எங்கள் தலைவரை முடக்குகிறது' என்றார்.

`கூட்டணி ஆட்சியா தமிழகத்தில்?' - 'ஷாக்' கொடுத்த சந்தோஷ் - பாஜக கூட்டத்தில் நடந்தது என்ன?

``அ.தி.மு.க தலைமையில் அணி அமைத்தாலும், தமிழகத்தில் தேசிய ஜனநாய கூட்டணியின் ஆட்சியே நடக்கும்.” என்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் பா.ஜ.க-வின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பி.எல்.சந்தோஷ்.தமிழ... மேலும் பார்க்க

`அதிமுக ஆட்சியாக இருந்தால் `ஜனநாயகன்' படம் எப்போதோ வெளியாகியிருக்கும்!' - சொல்கிறார் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரின் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட த.வெ.க-வினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர்ராஜூ முன்னிலையில் தங்களை அ.தி.மு... மேலும் பார்க்க

TNPSC: `இந்த தேதியில் நடக்கும்' - ரத்தான குரூப் 2, 2A தேர்வுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்.8) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டது.தேர்வு ஒத்திவைப்பால் தேர்வர்க... மேலும் பார்க்க

பாம்பு கடியால் துடித்த சிறுமி; சட்டென செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய எஸ்.ஐ-க்கு குவியும் பாராட்டு!

தஞ்சாவூர், கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் நேற்று மாலை, பெரிய கோயிலுக்கு வந்தார். கேரளாந்தகன் வாயிலுக்கும், ராஜராஜன் வாயிலுக்கும் இடையிலுள்ள புல... மேலும் பார்க்க

$500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? - பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம்

`அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளைச் செய்யும்' இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகளில் ஒன்று இது. 2... மேலும் பார்க்க

``உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது!’’ - ஸ்டாலின் பெருமிதம்

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் `டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் `ஜாகுவார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாகனங்களின் உற்பத்தி ஆலை அமைக்க கடந்த 20... மேலும் பார்க்க