Bigg Boss tamil 8: வெளியேறிய இரண்டு ஆண் போட்டியாளர்கள்! கடைசிக் கட்ட பரபரப்பில் ...
துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்! படுகாயமடைந்த சிறுவன்!
புது தில்லியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 15 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்.
வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியின் பி-ப்ளாக்கில் உள்ள தனது வீட்டின் வாசலில் நேற்று (ஜன.10) காலை 11.30 மணியளவில் நின்றுக்கொண்டிருந்த15 வயதுடைய சிறுவனிடம் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தகாத முறையில் நடந்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனை அந்த சிறுவன் எதிர்த்துள்ளார்.
அதனால், கோவமடைந்த அந்த நபர் தனது துப்பாக்கியால் அந்த சிறுவனை நோக்கி கண்மூடித் தனமாக சுட்டுள்ளார். இதில் அந்த சிறுவனின் வலது காலில் குண்டு பாய்ந்து அவர் மயங்கி விழுந்தார்.
இதையும் படிக்க:மகாராஷ்டிரம்: திடீர் முடி உதிர்வு..வழுக்கையாகும் நிலை! பொதுமக்கள் அச்சம்!
இதுகுறித்து, தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் அந்த சிறுவனின் தந்தை அவரை அருகில் உள்ள ஜக் பர்வேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தார். அங்கு அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.