செய்திகள் :

`` `துயரசக்தி' - இந்தக் கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் வாக்களித்தார்களா?" - ஸ்டாலின் விமர்சனம்!

post image

அ.தி.மு.க-வுக்குள் த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பான கருத்து வேறுபாட்டால் கட்சி, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாகப் பிரிந்தது. இந்த அரசியல் மோதல்களுக்கு இடையே, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரும் திடீரென சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்துத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதோடு, தமிழ்நாடு தலைமை செயலகத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் நேரில் சந்தித்து த.வெ.க-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

தவெக - விஜய்

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!

Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.

Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.

இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!" என விமர்சித்திருக்கிறார்.

எம்‌.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார்! - பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயக்குமார். அதேபோல் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட... மேலும் பார்க்க

`அதற்கு நான் பதில் சொல்ல முடியாது; பேரவைத் தலைவர் என்ற முறையில்...' - சபாநாயகர் சொல்வது என்ன?

அ.தி.மு.க-வுக்குள் த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பான கருத்து வேறுபாட்டால் கட்சி, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாகப் பிரிந்தது. இந்த அரசியல் மோதல்களுக்கு இடையே, சி.வி.சண்முக... மேலும் பார்க்க

`புதிய கரகாட்ட கோஷ்டி; ஆட்சியை காப்பாற்ற தகிடுதத்தம் அரசியல், வெட்கக்கேடு'- விஜய்க்கு இபிஎஸ் கண்டனம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்ப... மேலும் பார்க்க

`தேர்தலுக்கு முன்பே திமுக அதிமுக கூட்டணி; அனிதா மாதிரியானவங்க'- ஸ்டாலினுக்கு நிர்வாகி பகிரங்க கடிதம்

'திமுக அதிமுக கூட்டணி'நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளிவந்த நாள் முதல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விவகாரம் இதுதான்.தவெக தலைமையிலான அரசு அமைவதைத் தடுக்க இப்படியொரு மு... மேலும் பார்க்க

மேகதாது அணை: ``இதை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்" - விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்!

மேகதாது அணை திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த 2025 நவம்பர் 13 அன்று தள்ளுபடி செய்திருந்தது. ... மேலும் பார்க்க

`தலைமைச் செயலகமா... தவெக கட்சி அலுவலகமா?' - திமுக எம்.பி., வில்சன் கண்டனம்!

அ.தி.மு.க-வுக்குள் த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பான கருத்து வேறுபாட்டால் கட்சி, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாகப் பிரிந்தது. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்மு... மேலும் பார்க்க