செய்திகள் :

'துல்கர் சல்மானுக்கும் எனக்கும் பிரச்னையா?'- டொவினோ தாமஸ் விளக்கம்

post image

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார்.

ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (மார்ச்.30) நடைபெற்றது. இதில் டொவினா தாமஸ் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் " நீங்களும் தான் 'லோகா' படத்தில் நடித்திருக்கீர்கள். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. ஆனால் படக்குழு உங்களைப் பற்றி எங்கேயும் பேசவில்லை. துல்கர் சல்மானுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னை?" என்று கேட்கப்பட்டிருக்கிறது.

‘பள்ளிச்சட்டம்பி’
‘பள்ளிச்சட்டம்பி’

அதற்கு பதிலளித்த அவர், " என்ன பத்தி பேசலையா? ஏன் என்ன பத்தி பேசலன்னு கால் பண்ணி துல்கர் கிட்ட கேக்குறேன்" என சொல்லி நகைச்சுவையாக சிரித்தார்.

தொடர்ந்து பேசிய டொவினா, "நான், துல்கர் சல்மான் எல்லாம் ரொம்ப நாளா சேர்ந்து நடிச்சிருக்கோம். நான் அசிஸ்டன்ட் டைரக்டரா வொர்க் பண்ணதே துல்கரோட படத்தில தான்.

அதுக்கு அப்பறம் அவரோட ஒரு படத்தில வில்லனா நடிச்சேன். அப்போ இருந்து இப்ப வரைக்கும் அவர் என்கிட்ட இனிமையாத் தான் நடந்துபாரு.

'லோகா' படத்தில நடிச்ச எல்லாருடனும் சேர்ந்து நடிச்சிருக்கேன். நாங்க எல்லாருமே ப்ரெண்ட்ஸ் தான். இந்த மாதிரி வதந்திகளைப் பரப்பி விடுறது ஈசி தான். பெரும்பாலான நேரங்களில் இந்த மாதிரி வதந்திகளை கேட்டு சிரிப்பேன்.

டொவினோ தாமஸ்
டொவினோ தாமஸ்

'லோகா' படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்பறம் கூட துல்கர் தான் எனக்கு கால் பண்ணி துபாய்-ல புரொமோஷன் இருக்குன்னு என்னை டிக்கெட் போட்டுக் கூடிட்டுபோனாரு. ரெண்டு, மூணு நாள் அங்க இருந்து என்ஜாய் பண்ணோம்.

அதனால இந்த மாதிரி வதந்திகளை யார் பரப்பிவிடுறாங்கன்னு தெரியல. அவங்களுக்கு இதில என்ன சந்தோஷம்'னு தெரியல" என்று கூறியிருக்கிறார்.

Drishyam 3: "என் படங்கள் மெகா சீரியல்கள்போல் இருக்கிறதா?" - பதிலடி தந்த இயக்குநர் ஜீத்து ஜோசப்

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில், 'திரிஷ்யம் 3' திரைப்படம் மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மோகன்லால் நடிப்பில் வெளியான இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் மெகா ஹிட் ஆன நிலையில், மூன்றாம்... மேலும் பார்க்க

Mohanlal: "நாளை நானும் மறைந்துவிடுவேன்; அதுதான் யதார்த்தம்!" - மோகன்லால் உருக்கம்

நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், மலையாளத்தில் வெளிவரும் 'கிருஹலட்சுமி' இதழுக்க... மேலும் பார்க்க

புதுமுகங்களை வைத்து வசூலை அள்ளிய வாழ 2; உடனடியாக அறிவிக்கப்பட்ட 'வாழ 3' - நெகிழும் இயக்குநர்

மல்லுவுட்டில், 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே', 'குருவாயூர் அம்பலநடையில்' போன்ற திரைப்படங்களை இயக்கி அனைத்துப் பக்கமும் அறியப்பட்டவர் இயக்குநர் விபின் தாஸ். 'குருவாயூர் அம்பலநடையில்' திரைப்படத்திற்குப் பிறகு இவர... மேலும் பார்க்க

"பேசில் ஜோசப்பிற்காக எதையும் செய்ய தயங்க மாட்டேன்" - டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் ஆகியோர் நடித்திருக்கும் ‘பள்ளிச்சட்டாம்பி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பள்ளிச்சட்டம்பிஇப்படத்தின் ரிலீஸையொட்டி பல்வேறு இடங்களிலும் படக்கு... மேலும் பார்க்க

மேஜர் ரவி முதல் அஞ்சலி நாயர் வரை! - கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கும் திரைப்பிரபலங்கள்

கேரளாவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3 மணி வரையிலான நிலவரப்படி, 62 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு தேர்தலிலும் நடிகர்கள் பலரும் புதிதாக அரசி... மேலும் பார்க்க

Mammootty: " `லோகா' படத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" - மம்மூட்டி கலகல

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை 'சீ யூ சூன்', 'மாலிக்' போன்ற திரைப்படங்களை இய... மேலும் பார்க்க