செய்திகள் :

`தூங்க கூட நேரம் கிடைக்கவில்லை’ - தண்ணீர் தொட்டியில் வீசி குழந்தையைக் கொன்ற தாய்

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு துணை மின்நிலையம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா (27). ஷு கம்பெனி தொழிலாளி. இவரின் மனைவி அஸ்லியா தஸ்மின் (23). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஹர்பா பாத்திமா எனப் பெயர் வைத்தனர்.

அக்பர் பாஷா தனது குடும்பத்துடன் அதே பகுதியிலுள்ள அமீர் பாஷா என்பவரின் வீட்டு மேல்மாடியில் வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று காலை, அக்பர் பாஷா வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி அஸ்லியா தஸ்மின், குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார்.

அஸ்லியா தஸ்மின்

மதியம் 12 மணியளவில், வீட்டில் இருந்த 3 மாத பெண் குழந்தை மாயமாகிவிட்டதாகக் கூறி அஸ்லியா தஸ்மின், தரை தளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளரிடம் சென்று கூறியுள்ளார். அஸ்லியா தஸ்மினுடன் சேர்ந்து வீட்டு உரிமையாளரும் குழந்தையை தேடியுள்ளார். அப்போது, சந்தேகப்பட்டு வீட்டு படிக்கட்டின் கீழுள்ள தண்ணீர்தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில், மர்மமான முறையில் குழந்தை இறந்துகிடந்தது.

இதையடுத்து, குழந்தையை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியதில் சந்தேக வலையில் குழந்தையின் தாய் அஸ்லியா தஸ்மீனே சிக்கினார்.

கொலை செய்யப்பட்ட குழந்தை

கிடுக்கிப்பிடி விசாரணையில், பெற்றெடுத்த குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்ததை அஸ்லியா தஸ்மின் ஒப்புக்கொண்டார். 3 குழந்தைகளை வளர்க்க முடியாததாலும், தூங்க கூட நேரம் இல்லாததாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி குழந்தையை கொல்லும் முடிவுக்கு வந்ததாக அஸ்லியா தஸ்மின் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதையடுத்து, அவரைக் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருக்கின்றனர். பெற்றத் தாயே கைக்குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேட... மேலும் பார்க்க

காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம்... மேலும் பார்க்க

புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை

முன்னணி நிறுவனங்களின் மருந்துகள் போலியாக தயாரிப்புஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியி... மேலும் பார்க்க

சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; வீடியோ வைரல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப... மேலும் பார்க்க

``என்னை விட அழகா இருக்க கூடாது'' - 4 பேரை கொலை செய்த பெண்; திருமண வீட்டில் சோகம்

தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்று பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த நினைப்பு காரணமாக ஹரியானாவில் பெண் ஒருவர் 4 சிறார்களை கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நெளல்தா பகு... மேலும் பார்க்க

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் - லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறி... மேலும் பார்க்க