செய்திகள் :

தூத்துக்குடி: சதைத் துணுக்கு, டி.என்.ஏ ரிப்போர்ட்- மாணவி கொலை வழக்கில் சி.சி.டி.வி-யால் சிக்கிய நபர்

post image

தூத்துக்குடி பள்ளி மாணவி மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், 9 நாள்களுக்குப் பிறகு டி.என்.ஏ பரிசோதனை முடிவின் அடிப்படையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி பள்ளி மாணவி, மர்மமான முறையில், கடந்த 10-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. சந்தேகிக்கும் படியாக 14 பேரிடம் முதற்கட்ட விசாரணை நடந்தது. அதன்பிறகு மாணவியுடன் படித்த சக மாணவர்கள், உறவினர்கள், உறவினர்களில் சந்தேகிக்கும்படியான நபர்கள் என விசாரணை நடத்தியுள்ளனர். இருப்பினும், குற்றவாளிகளைப் பற்றி துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறி வந்தனர்.

சந்தேகப்படும் 5 நபர்களின் டி.என்.ஏ மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வக பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அதில், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீஸார் கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``மாணவியின் நகத்தில் இருந்த சிறிய சதைத் துணுக்கு மூலம் நடத்தப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில் கொலையாளி கண்டறியப்பட்டுள்ளார். முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் இருந்து பைக்கைத் திருடி வந்த தர்ம முனீஸ்வரன், மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து அவரைக் கொலைசெய்துள்ளார்.

வேறொரு பைக் திருட்டு வழக்குக்காக தூத்துக்குடி நீதிமன்றம் வந்த தர்ம முனீஸ்வரனை, நீதிமன்றத்திலேயே வைத்து கைதுசெய்திருக்கின்றனர். அப்பகுதி காட்டுக்குள் இருந்த காற்றாலையின் சி.சி.டி.வி மூலம் பைக்கில் இவர் வந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தர்ம முனீஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு எட்டயபுரத்தில் மூதாட்டி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற வழக்கும் இவர்மீது இருக்கிறது. மாணவியை ஏன் கொலை செய்தார்? எப்படி கொலை செய்தார்? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து விரிவான விளக்கம் விரைவில் வெளியிடப்படும்" என்றனர்.

`போலீஸ் துணையுடன் தற்கொலைக்கு.!' - வீட்டுக்குள் இருந்தே செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பிரமுகர்

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கேபிள் செந்தில் என்கிற செந்தில்குமார். இவர் அதிமுக-வில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட அம்மா பேரவை மாவட்டத் தலைவராக இருக்கிறார். தஞ்சாவூர், பால்பண்ணை ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் ஷேக் சிர... மேலும் பார்க்க

தருமபுரி: கால்பந்தாட்ட வீரர் தற்கொலை; போக்சோ வழக்கு பதிவு செய்ததுதான் காரணமா?

போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தலைமறைவான கால்பந்தாட்ட வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பென்னாகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போக்சோதருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தை... மேலும் பார்க்க

திருச்சி: 'முறையாக சிகிச்சை அளிக்காததால் நான்கரை வயது மகன் பலி' - சிறுவனின் பெற்றோர் குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் கண்ணனூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் தெரு நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (வயது:34 ). இவரது மனைவ... மேலும் பார்க்க

சென்னை: `நீ அழகாக இருப்பதால்தானே...' - மனைவி மீது ஆசிட் வீசிய கணவர்

சென்னை பல்லாவரம், பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சனா பாத்திமா (29). இவருக்கும் முகமது அலி (31) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு ம... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பைக் ரிப்பேர் செய்ய பணம் கேட்டு மதுபோதையில் தகராறு; மகனைக் கொன்ற தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகிலுள்ள படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இவர்களுக்கு கனகராஜ், பாலபாரதி என இரண்டு மகன்கள் உள்ளனர். பாலபாரதி, திருவள்ளூர்... மேலும் பார்க்க

மும்பை: விபரீதத்தில் முடிந்த குடும்பச் சண்டை; மகன் கண்முன்னே மனைவியைக் கொன்ற கணவன்; என்ன நடந்தது?

மும்பை முலுண்ட் பகுதியில் வசிப்பவர் ராஜு குப்தா. இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பாவிற்கும், குப்தாவுக்கும் இடையே அடிக்கடி சிறிய சிறிய பிரச்னைகளுக்கெல்லாம் சண்டை ஏற்பட்டுக... மேலும் பார்க்க