செய்திகள் :

தூத்துக்குடி: வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவி; காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு- கிராம மக்கள் மறியல்

post image

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ். விவசாயியான இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களது 17 வயது மகள் குறுக்குச்சாலை, அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (10-ம் தேதி) 12-ம் வகுப்பு பொது தேர்வை எழுதிவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். மாலை சுமார் 6 மணிக்கு அவர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை சுப்புராஜ் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அங்கிருந்த போலீஸார், பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

மாணவியின் உறவினர்கள் சாலை மறியல்
மாணவியின் உறவினர்கள் சாலை மறியல்

இதையடுத்து சுப்புராஜ் இன்று (11-ம் தேதி) காலை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, இன்று மாலை சுமார் 5 மணியளவில் வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் குளத்தூர் - குறுக்குச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் போலீஸார் மாணவியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் ஆறுதல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பள்ளி மாணவி காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களைப் பார்த்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

விருதுநகர்: பள்ளி வளாகம், கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்; ஆசிரியைக்கு வலுக்கும் எதிர்ப்பு!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஜெகஜீவன் ராம் தெருவில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 164 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை வைத்து ஆசி... மேலும் பார்க்க

மானாமதுரை: `காவல்துறையினர் கண்களைக் கட்டி, காலை அடித்து உடைத்தனர்!' - வெளியான ஆகாஷ் வாக்குமூலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை - கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்களைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி, மா... மேலும் பார்க்க

சிவகாசி: பள்ளி அருகே பட்டாசு ஆலைகள், கடைகளுக்கு அனுமதி; விபத்து அபாயத்தால் பயத்தில் பெற்றோர்கள்

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் உட்பட மாவட்டங்கள் முழுவதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன. இதில், சிவகாசியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பட்டாசுக் கடைகள் உள்ளதாகக் கூறப்படு... மேலும் பார்க்க

பெங்களூரு: 'போலி CBI, 69 நாள் டிஜிட்டல் கைது' - 94 வயது முதியவர் ரூ.5 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

நாட்டில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் கும்பங்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சைபர் குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு மாநிலமும் தனி சைபர் பிரிவு போலீஸ் படையை ... மேலும் பார்க்க

ஈரோடு: `பட்டியல் சாதியினருக்கு திருமண மண்டபம் தர மறுத்த விவகாரம்' - வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் டால்பின் என்ற பெயரில் தனியார் திருமண மண்டபம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மண்டபத்தில் தன்னுடைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதற்காக அதே பெருந்துறையைச் சேர்ந்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: முதியவரைக் கொன்று மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ்

75 வயது முதியவரைக் கொடூரமாகக் கொலை செய்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொலைகாரனை கிருஷ்ணகிரி எஸ்.பி தலைமையில் 7 தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.Murderகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரு... மேலும் பார்க்க