செய்திகள் :

தென்காசி: அழிவின் விளிம்பில் குள்ளநரிகள்; பாதுகாக்க முயற்சி எடுக்கும் வனத்துறை!

post image

சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் குள்ளநரிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வரும் நிலையில், தென்காசி வனக்கோட்டம் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

அழிவின் விளிம்பில் குள்ளநரி:

வனஉயிரின் பாதுகாப்பு சட்டம் 1972-ன் அட்டவணை 1-ல் இடம்பெற்று, புலி மற்றும் சிறுத்தை போன்ற உயர் பாதுகாப்பு அந்தஸ்து பெற்றிருந்தாலும், குள்ளநரிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. வாழ்விட இழப்பு, நகர்மயமாக்கல், தெருநாய்களுடனான போட்டி, நோய்ப் பரவல் மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவை இவற்றின் எண்ணிக்கையை ஆபத்தான அளவுக்குக் குறைத்துள்ளன.

சூழலியல் முக்கியத்துவம்:

மாவட்ட வனஅலுவலர் ரா.ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கையின்படி, குள்ளநரி ஒரு முக்கிய துப்புரவாளனாகவும், உணவுச் சங்கிலியின் சமநிலையைப் பேணுபவராகவும் செயல்படுகிறது. மயில்கள், எலிகள், பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்ப் பரவலைத் தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

குள்ளநரி

மாணவர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டம்:

விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், பள்ளிகளில் "கார்ட் அண்ணா/கார்ட் அக்கா" திட்டத்தின் கீழ் வனக்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். கல்லூரிகளுக்கு வன அலுவலர்கள் நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மாணவர்களின் நேரடிப் பங்களிப்பை உறுதி செய்ய, பறவைகள் கணக்கெடுப்பு, பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு, குள்ளநரி கணக்கெடுப்பு போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். மரக்கன்றுகள் உற்பத்தி, மருத்துவத் தோட்டம் அமைத்தல் போன்ற நடைமுறை பயிற்சிகளும் வழங்கப்படும்.

Golden Jackal Ambassador திட்டம்:

பள்ளி மற்றும் கல்லூரிகளில் "Golden Jackal Ambassador" (குள்ளநரி தூதுவர்கள்) திட்டம் செயல்படுத்தப்படும். கிராம வனக்குழுக்களின் பங்கு வலுப்படுத்தப்படும். காடு-சாலை சந்திப்புகளில் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகள் (Wildlife Crossing) அமைக்கப்படும்.

குள்ளநரி

தெருநாய்களுக்கு தடுப்பூசி திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை, இறைச்சி கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

அடுத்த தலைமுறைக்கான பொறுப்பு:

"பசுமையான சூழலும் சுத்தமான இயற்கையும் அடுத்த தலைமுறைக்கு நாம் தர வேண்டிய சிறந்த பரிசு" என்று மாவட்ட வனஅலுவலர் ராஜ்மோகன் வலியுறுத்தியுள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆரோக்கியமான உலகை உருவாக்க முடியும். பாதிக்கப்பட்ட குள்ளநரிகளை பாதுகாப்பான சூழல் பகுதிகளில் மீள்விடுதல், கிராமப்புற மக்கள் மூலம் தகவல் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாழாகும் பொருநை ஆறு; வரி செலுத்தாத பெரு நிறுவனங்கள்... கடிவாளம் போடப்படுமா?! | Thamirabarai River

பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு, பொதிகை மலையில் தோன்றிப் பாய்ந்து பல கிளை ஆறுகளைக் கொண்டது. சில மாதங்களுக்கு முன் சில தொழில் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருக்கும் நீரைப் பயன்படுத்திக்கொண்டு... மேலும் பார்க்க

`பிளாஸ்டிக்குக்கு நோ; பப்பாளி தண்டில் ஸ்ட்ரா'- இளநீர் வியாபாரியின் Eco Friendly முன்னெடுப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர்‌ இளங்கலை பட்டதாரியான செந்தில். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.இதில் கடந்த ஏழு வருடங்களாக இயற... மேலும் பார்க்க

மாதவ் காட்கில்: ``வேள்பாரிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் நேசித்தவர்"- பூவுலகின் நண்பர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த சிந்தனையைத் தூண்டும் வகையில் அறிக்கை தயாரித்த மூத்த சூழலியல் அறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மாதவ் காட்கில் (83) நேற்று இரவு (7.1.2026) புனேயில் கால... மேலும் பார்க்க

Madhav Gadgil: மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும்வரை இவர் பெயர் ஒலிக்கும் - மறைந்தார் சூழலியல் பேரறிஞர்

இந்திய துணைக்கண்டத்தின் பெருங்கொடை, பேரதியசம், இயற்கையின் புதையல் என உயிரியலாளர்களாலும் இயற்கையியலாளர்களாலும் போற்றப்படுகிறது மேற்கு தொடர்ச்சி மலை. மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகளால் சிதைக்கப்பட்ட... மேலும் பார்க்க

ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? - வனத்துறை விளக்கம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள போர்த்தியாடா பகுதி தனியார் தேயிலைத் தோட்டத்தில் காயத்துடன் புலி ஒன்று நடமாடி வருவதை உள்ளூர் மக்கள் கடந்த வாரம் பார்த்துள்ளனர். செல்போன்களில் பதிவு செய்து வனத்துறைய... மேலும் பார்க்க

'மலை ரயில் பாதை முதல் மின் கம்பங்கள் வரை சேதம்' - ஓர் இரவில் குன்னூரைப் புரட்டிப்போட்ட கனமழை |Photos

குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு கு... மேலும் பார்க்க