முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் - இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மெட்டா சேவைகள் ...
"தென்னாப்பிரிக்க அணியில் இப்படிப்பட்ட ஓர் இளம் வீரர் இல்லை.!" - சூர்யவன்ஷியை புகழ்ந்த டேல் ஸ்டேயின்
தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டேயின் இந்திய இளம் வீரர் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரரான சூர்யவன்ஷி, தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதங்கள் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார்.
ஐபிஎல்லில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பிடித்திருக்கிறார்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டேயின் இளம் வீரர் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். "வைபவ் சூர்யவன்ஷி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்குள் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை விட சாதனைப் படைப்பார்.
தற்போது உள்ள சர்வதேச வீரர்களைக் காட்டிலும் சிறப்பான திறமை அவருக்கு உள்ளது. ஆச்சர்யம் அளிக்கக்கூடிய சிறுவனாக உள்ள அவர் இந்திய கிரிக்கெட் அணியின் சொத்தாக இருப்பார்.
தென்னாப்பிரிக்காவில் தற்போது 14 அல்லது 15 வயதில் இப்படிப்பட்ட ஒரு இளம் வீரர் இல்லை என்று நான் நினைக்கிறேன். சூர்யவன்ஷியை வழிநடத்துவதில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும். அவரை சரியாக கையாளவில்லை என்றால், இந்திய அணி அவரை இழந்துவிடும்" என்று கூறியிருக்கிறார்.



















