செய்திகள் :

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணையுமா? - அஜித் பவார் மனைவி, மகன்களை சந்தித்த சரத் பவார்

post image

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித்பவார் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் துணைமுதல்வராக பதவியேற்றுள்ளார்.

அஜித்பவார் மற்றும் சரத்பவார் தலைமையில் செயல்படும் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இணைவது குறித்து தனது மரணத்திற்கு முன்பே சரத்பவாருடன் அஜித்பவார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் இப்போது அஜித்பவார் இல்லாத நிலையில் அஜித்பவார் கட்சியை சேர்ந்த சில தலைவர்களும், பா.ஜ.கவும் சரத்பவார் அணியுடன் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இணைய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டு சொந்த ஊரான பாராமதி திரும்பி இருக்கும் சுனேத்ரா பவாரை அவரது வீட்டிற்கு சென்று சரத்பவார் சந்தித்து பேசி இருக்கிறார். அஜித்பவார் வீட்டில் தனி அறையில் சுனேத்ராபவார் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

சுனேத்ரா பவார்

இந்த சந்திப்பின் போது சுனேத்ரா பவார் கண்ணீரை அடக்க முடியாமல் அழுததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு முன்பு அஜித்பவாரின் சகோதரி விஜயா பாட்டீல் மற்றும் அஜித்பவாரின் மகன்கள் இரண்டு பேரையும் பிரதிஷ்தான் கல்வி வளாகத்திற்கு அழைத்து அவர்களுடன் தனிப்பட்ட முறையில் சரத்பவார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வித்யா பிரதிஷ்தான் கல்வி நிறுவனத்திற்கு சரத் பவார் தலைவராக இருக்கிறார். இதில் அஜித்பவாரும் அறங்காவலராக இருந்தார். இச்சந்திப்பை தொடர்ந்து சரத்பவார் தனது மனைவியோடு அஜித்பவார் இல்லத்திற்கு சென்று சுனேத்ரா பவாரை சந்தித்து பேசினார். பின்னர் சரத்பவார் அளித்த பேட்டியில், அஜித்பவாரின் விமான விபத்து குறித்து சந்தேகம் எழுப்பியதோடு அது குறித்து விசாரிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். சுனேத்ரா பவாருடன் என்ன பேசிக்கொண்டார் என்ற விபரம் குறித்து சரத்பவார் எதுவும் குறிப்பிடவில்லை.

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், "விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின... மேலும் பார்க்க

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். ... மேலும் பார்க்க

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷ... மேலும் பார்க்க

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யா... மேலும் பார்க்க

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்... மேலும் பார்க்க