செய்திகள் :

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம்: வரவேற்பு பேனரில் எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பா?

post image

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க-வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் நடைபெற்றது.

miss aana edappadi photo

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க அன்புமணி, அ.ம.மு.க டி.டி.வி.தினகரன், த.மா.கா ஜி.கே.வாசன், பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்ட வரவேற்பு வளைவுகளில் பிரதமர் மோடி, அமித் ஷா முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்களான அன்புமணி ராமதாஸ், டி.டி.வி தினகரன், ஜி.கே வாசன் ஆகியோரது படங்கள் வரை இடம் பெற்றுள்ளன.

edappadi palanichami

அந்த, அந்த குறிப்பிட்ட வரவேற்பு வளைவுகளில் மட்டும் அ.தி.மு.க கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் எடப்பாடி பழனிசாமியின் படம் மட்டும் இல்லாமல் போனது, பேசுபொருளானது.

இதுகுறித்து, பேசிய சிலர்,

"இப்படி, திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளதா அல்லது இது ஒரு கவனக்குறைவா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, இதே போன்ற ஒரு கூட்டத்தில் பெரியார் படம் வைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், தற்போது எடப்பாடியின் படம் விடுபட்டிருப்பது அ.தி.மு.க தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு ‘புறக்கணிப்பு’ என்றே அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் கருதுகின்றனர்.

edappadi palanichami

அதேநேரம், விழா மேடையிலும், அந்த பகுதியில் அங்கங்கே தனித்தனியாகவும் இடப்படியின் போட்டோ, வானுயர கட்டவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த குறிப்பகுதியில் சில வரவேற்பு வளைவுகளில் மட்டும் அவரது போடோ இடம்பெறவில்லை. மாறாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டோக்கள் இடம்பெற்றிருந்தன. இது, அ.தி.மு.க-வினருக்கு தெரியாமல் நடந்ததா, அல்லது அவர்களுக்கு தெரிந்தே இதை அனுமதித்தார்களா என்பது தெரிவில்லை" என்றார்கள்.

ஐநா: ஈரானுக்கு எதிராக வாக்களித்த இந்தியா; வெளிநடப்பு செய்த ரஷ்யா, சீனா! - என்ன நடந்தது!

அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கி இன்று 13 நாள்கள் ஆகிவிட்டது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரான்... மேலும் பார்க்க

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்குள் `குடி’மகன் குறட்டைவிட்ட விவகாரம்! - காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆடைகளை கழற்றிவிட்டு அயர்ந்து தூக்கம்!புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான ஆளுநர் மாளிகையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதனால், கடற்கரை சாலையில் கலாசா... மேலும் பார்க்க

`டேமேஜை சரிக்கட்டும் அன்பில்? டு வாய்திறக்காத சிட்டிங் MLA-க்கள்; கொதிக்கும் சிறுத்தைகள்' | கழுகார்

கொதிக்கும் சிறுத்தைகள்வாய்திறக்காத சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள்!தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் வி.சி.க - தி.மு.க இடையே நாளுக்கு நாள் கசப்பு மேலோங்கி வருகிறது. வி.சி.க மாணவரணி மாநில நிர்வாகி நெப்போலியன்... மேலும் பார்க்க

`கப்பலை மூழ்கடிப்பது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்' - ஈரான் கப்பலை தாக்கியது குறித்து ட்ரம்ப்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. ஈரானும் இருபெரும் வல்லரசு நாடுகளை எதிர்த்து நிற்கிறது. இந்த நிலையில், ஈரானின் ராணுவக் கட்டமைப்பை அமெரிக்கப் படைகள் முற்ற... மேலும் பார்க்க