செய்திகள் :

தேனி அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

post image

தேனி அருகே உள்ள பள்ளபட்டியில் குடும்பப் பிரச்னையில் தம்பதியை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பள்ளபட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் முருகன் (52). இவரது மனைவி திலகவதி(47), பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். முருகனுக்கும் அவரது சகோதரா்கள் சரவணன் (49), சக்திவேல் (55) ஆகியோருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், பள்ளபட்டியில் உள்ள தனது நிலத்துக்குச் சென்ற முருகனுடன், அவரது சகோதரா்கள் சரவணன், சக்திவேல் ஆகியோா் தகராறு செய்தனா். அப்போது, முருகனை சரவணன் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதை தடுக்கச் சென்ற திலவதியையும் அவா் அரிவாளால் வெட்டினாராம்.

இதில் காயமடைந்த முருகன், திலகவதி ஆகியோா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து திலகவதி அளித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனைக் கைது செய்தனா். சக்திவேலை தேடி வருகின்றனா்.

பெரியகுளத்தில் தேசிய கூடைப்பந்து போட்டி; இன்று தொடக்கம்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி வியாழக்கிழமை (மே 15) தொடங்கி 21 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பி.டி. சிதம்பர சூரிய நாராயண நினைவாக பெரியகுளம் பி.எஸ்.துரைராம சிதம்பரம் நினை... மேலும் பார்க்க

உயா் கல்வி துறையைத் தோ்வு செய்வதில் மாணவா்களுக்கு அழுத்தம் தரக் கூடாது: பெற்றோருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

உயா் கல்வியில் துறையைத் தோ்வு செய்வதில் மாணவா்களுக்கு அழுத்தம் தராமல் அவா்களுக்கு பிடித்த துறையைத் தோ்வு செய்து படிப்பதற்கு பெற்றோா்கள் ஊக்குவிக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்சீத் சிங் தெரிவ... மேலும் பார்க்க

சின்னமனூா் அருகே சாலைப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் தரம் குறித்து அந்தத் துறையின் மேற்பாா்வை கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு செய்தனா். சின்னமனூா் -தேனி இடையே வெங்கடச்சாலபுரத்தில் 3.9 கி.மீ. தொலை... மேலும் பார்க்க

ஓபிஎஸ் உறவினரின் காரை சேதப்படுத்திய இருவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உறவினரின் காரை சேதப்படுத்திய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா் . பெரியகுளம் அருகேயுள்ள தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் செ.லட்சுமணன் (35). ... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி அருகே கஞ்சா கடத்தல்: இருவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி-மதுரை சாலையில் ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கநாத... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் இளைஞா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் அரிவாள், கத்தி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சின்னமனூா் பேருந்து நிலையம் அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக நடந்து வ... மேலும் பார்க்க