தேனி: "யார் தற்குறி?" - பேனர் சண்டையில் திமுக - தவெக; மோதல் பதற்றம்; பேனர் அகற்ற...
"தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை" - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம்
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜன.19) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, "அதிமுகவை அடிமைக் கட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வருகிறார்.
அதிமுக அடிமைக் கட்சியாக இருந்தால் கடந்த மக்களவைத் தேர்தலில் எப்படி தனித்துப் போட்டியிட்டிருக்க முடியும்? வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடும்.

ஆனால் அதிமுக தனித்துதான் ஆட்சி அமைக்கும். தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி. ஆட்சிக்காக கூட்டணி இல்லை. தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை இதுவரை விரும்பியது இல்லை. இனியும் விரும்ப மாட்டார்கள்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு மக்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே அதிமுகவின் கொள்கை" என்று பேசியிருக்கிறார்.
















