செய்திகள் :

"எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்!" - அமைச்சர் ரகுபதி விளக்கம்

post image

'தேசிய கீதம் பாடப்படவில்லை... மைக் ஆஃப் செய்யப்பட்டது... தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை... பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்று ஏகப்பட்ட காரணங்களைக் கூறி தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், ஆளுநரின் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடுத்த விளக்கம்...
சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆர்.என்.ரவி
சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆர்.என்.ரவி

"தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபுப்படி, கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படும். இதை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக கூறி வருகிறோம்.

ஆனால், ஆளுநர் ஆரம்பத்திலேயே தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறினார்.

அவர் சட்டமன்றத்தில் ஏதேனும் பிரச்னையைக் கிளப்ப முடியுமா என்று பார்த்தார். ஆனால், அது முடியவில்லை. அதனால், இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்தார்.

ஆளுநர் உரையைப் படிக்கக் கூறி, எவ்வளவு தாழ்ந்து போய் கேட்க முடியுமோ, அவ்வளவு தாழ்ந்து சபாநாயகர் கேட்டுப்பார்த்தார். ஆனால், ஆளுநர் வாசிக்காமல் வெளியேறிவிட்டார்.

மீடியா, பிற கட்சிகள் என அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருந்தோம் - எந்த மைக் ஆஃப் செய்யப்பட்டது? அது சுத்தமான புளுகு.

ஆளுநரை ஆளுநர் உரை பேசத் தான் அழைத்தோமே தவிர... மைக்கை ஆஃப் செய்ய அழைக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் கூறாத குற்றச்சாட்டுகளைக் கூட ஆளுநர் கூறுகிறார்.

ஆர்.என்.ரவி - அப்பாவு
ஆர்.என்.ரவி - அப்பாவு

தமிழ்நாடு அரசின் முதலீட்டுத் தகவல் தவறு என்று கூறுகிறார். மத்திய அரசு தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.9 சதவிகிதமாக உள்ளது என்று கூறியிருக்கிறது. முதலீடு, வேலைவாய்ப்பு இல்லாமல் எப்படி 11.9 சதவிகித வளர்ச்சியை எட்ட முடியும்?

ஆளுநர் வெளியேறிய உடனேயே ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளிவருகிறது என்றால், அது முன்னரே தயாரிக்கப்பட்டது தான். அதில் எங்களுக்கு கவலை இல்லை.

தமிழ்நாட்டில் பெண்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு வழங்கப்படுகிறது. போதைப்பொருள் உற்பத்தி தமிழ்நாட்டில் இல்லை.

இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகத்தின் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. பெண்கள் அதிகம் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு.

பிற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில் பன்மடங்கு கல்வி வளர்ச்சி உள்ளது

தற்கொலைக்கு பல காரணங்கள் உண்டு. அதற்கு அரசு காரணமாக முடியாது. ஆனால், அதை தடுக்க அரசு உதவி செய்து வருகிறது" என விளக்கம் அளித்தார்.

ஆளுநர் வெளிநடப்பு: "நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா?" - அப்பாவு கேள்வி

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தேசிய கீதம் பாடவில்லை என்று இன்று சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.அதன் பின், 'ஆளுநரின் மைக் பலமுறை ஆஃப் செய்யப்பட்டது... தேசிய கீதத்திற்... மேலும் பார்க்க

சட்டசபை: "ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க சட்டத் திருத்தம்” - முதல்வர் ஸ்டாலின் அதிரடி

இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என் ரவி உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இதற்கு திமுகவினர் கடுப்பு எதிர்ப்பு தெரிவித்தி... மேலும் பார்க்க

"தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை" - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம்

எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜன.19) நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, "அதிமுகவை அடிமைக் கட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வருகிறார்... மேலும் பார்க்க

'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2

கடந்த காலங்களில், கட்சிகளெல்லாம் கூட்டணிக்காக அடித்த அந்தர் பல்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் கம்பு சுற்றிய சம்பவங்களையும் ரீவைண்ட் செய்து பார்த்தால் செம ரகளையாக இருக்கும். அதற்காகவே ஸ்பெசலாக வருகிறது'... மேலும் பார்க்க

`காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டின்... மேலும் பார்க்க