சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணி செய்ய வேண்டியதென்ன? ரெய்னா பேட்டி!
தேர்தல் விதிமீறல்: தில்லி முதல்வர் மீது வழக்குப்பதிவு!
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தில்லி முதல்வர் அதிஷி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப் பேரவைக்கான வாக்குப்பதிவு பிப்.5 (நாளை) நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
இதையும் படிக்க : ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
இந்த நிலையில், தில்லி கல்காஜி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தபுரி பகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும் முதல்வருமான அதிஷியும் அவரது ஆதரவாளர்கள் 50 முதல் 70 பேரும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காணப்பட்டதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய காவல்துறையினர் விடியோவாக பதிவிட்டுள்ளனர். அப்போது, ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் காவலரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறையை மீறியதாக முதல்வர் அதிஷி மீதும், காவலரை தாக்கியதாக ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிஷி கூறியதாவது:
“பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியும் அவரது குடும்பத்தினரும் வெளிப்படையாக விதிமுறைகளை மீறி வருகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நான் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தேன், ஆனால் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமாரை குறிப்பிட்டு, தேர்தல் செயல்முறையை எவ்வளவு கெடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.