செய்திகள் :

தொழிலதிபரைக் கரம்பிடிக்கும் சச்சின் டெண்டுல்கர் மகன்! - யார் இந்த சானியா சந்தோக்?

post image

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், இளம் தொழிலதிபர் சானியா சந்தோக்-குக்கும், மும்பையில் அடுத்த (மார்ச்)மாதம் 5 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி, அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன.

பிரதமருக்கு திருமண அழைப்பு
பிரதமருக்கு திருமண அழைப்பு

தனது மகன் திருமண விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் நேரில் சென்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

கடந்த வருடம் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், சானியா சந்தோக்-குக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில் தற்போது இந்தத் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த இருக்கின்றனர்.

யார் இந்த சானியா சந்தோக்?

சானியா சந்தோக் பிரபல தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பிரபல தொழிலதிபர் ரவி காய்-ன் பேத்தி.

London School of Economics and Political Science கல்லூரியில் படித்த சானியா, பாவ்ஸ் பெட் ஸ்பா & ஸ்டோர் எல்எல்பி நிறுவனத்தின் பங்குதாரராகவும், இயக்குநராகவும் இருக்கிறார்.

அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக்
அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக்

இவர்களது குடும்பத்திற்கு இண்டர்கான்டினன்டல் என்ற ஹோட்டல் இருக்கிறது.

இது தவிர புரூக்ளின் க்ரீமெரி என்ற ஐஸ் கிரீம் பிராண்ட் கடைகளும் இருக்கிறது.

விலங்கு நலன் மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் கொண்ட சானியா, இன்ஸ்டாகிராமில் 820 பாலோவர்ஸ்களைக் கொண்டிருக்கிறார்.

T20 WC: பாகிஸ்தான் வீரரின் பந்து வீச்சு; கிளம்பும் எதிர்ப்புகள் - ஆதரிக்கும் அஷ்வின்

கொழும்புவில் நடைபெற்ற அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், உஸ்மான் டரிக் பந்துவீசிய விதம், தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. பேசுப்பொருளான உஸ்மான் டரிக் பந்துவீச்சு உஸ்மான் டரிக், பந்துவீச வரும்போ... மேலும் பார்க்க

IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில் என்ன?

19-வது ஐ.பி.எல் சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது. இந்நிலையில் சிஎஸ்கே ceo காசி... மேலும் பார்க்க

T20 World Cup: "இந்தியாவுடன் விளையாடுகிறோம்; ஆனால்" - ஐசிசிக்கு பாகிஸ்தானின் நிபந்தனைகள் என்னென்ன?

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.இந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்... மேலும் பார்க்க

IND vs USA: "எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம்"- அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல்

ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.7) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. அ... மேலும் பார்க்க

U19 World Cup : தீபேஷ், அம்ப்ரிஷ்!உலகக்கோப்பை அணியில் ஜொலித்த தமிழ்நாட்டு தங்கங்கள்! - யார் இவர்கள்?

தமிழ்நாட்டில் இருந்தும் இந்திய அணிக்குத் தொடர்ந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சர்வதேச அளவில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில், சமீபத்தில் முடிந்த U-19 உலகக்கோப்பை தொடரில் தங்களின் முக்க... மேலும் பார்க்க

`பாகிஸ்தானுக்கு தோல்வி பயத்தை காட்டிய நெதர்லாந்து!' - முதல் ஆட்டமே திக்... திக்! | T20 WC 2026

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியே ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கே கொண்டு வந்துவிட்டது. கொழும்பில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்... மேலும் பார்க்க