வால்பாறை: எச்சரித்த வனத்துறை... கண்டுகொள்ளாத ஜெர்மன் பயணி - பைக்குடன் தூக்கி வீச...
தொழிலாளி தற்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அருகே சோழம்பட்டியைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி மகன் குப்புசாமி (36). கூலித் தொழிலாளியான இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் சோழம்பட்டி விலக்குப் பகுதி சாலையோரம் இறந்து கிடந்தாா். உடல் அருகே மதுபுட்டியும், விஷ புட்டியும் கிடந்தன. தகவலறிந்து அங்கு வந்த கண்டவராயன்பட்டி போலீஸாா் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.