திருப்பரங்குன்றம் தூணில் வைக்கபட்ட கொப்பரை; 5 மணிக்கு ஏற்றபட போகும் தீபம்... வெள...
தொழில்நுட்பமும் இயற்கையும் இணையும் கோவை வீடு!
கோயம்புத்தூர் பேரூருக்கு அருகிலுள்ள பச்சாபாளையத்தில், 7 சென்ட் நிலத்தில் நான்கு படுக்கையறைகள், ஹோம் தியேட்டர், நீச்சல் குளம், மாடித் தோட்டம் ஆகியவற்றுடன் இந்த வீடு அமைந்துள்ளது. ‘Space Language Architects’ நிறுவனத்தின் வடிவமைப்பாளர் தினேஷ் பெருமாள் இதை வடிவமைத்தார்.

வீட்டில் வசிப்போரின் விருப்பங்களையும் வாழ்க்கைமுறையையும் புரிந்துகொண்டு, ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்துவமான கான்செப்டை உருவாக்குவதே அவரது அணுகுமுறை. தண்ணீர், மின்சாரம் போன்ற இயற்கை வளங்கள் தேவைக்கு அதிகமாகச் செலவாகக் கூடாது என்பது உரிமையாளரின் முக்கிய நோக்கம்.

நுழைவாயிலில் கோட்டா, ஜெய்சால்மர் கற்கள், பசுமைச் செடிகள், சிறிய நீரூற்று, பாரம்பர்ய மர வேலைப்பாடுடன் கூடிய கதவு ஆகியவை வரவேற்கின்றன. கண்ணாடிச் சுவர்களுடன் கூடிய ஹை சீலிங் ஹால் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் தருகிறது. படிக்கட்டின் கீழ்ப்பகுதி திண்ணையாக மாற்றப்பட்டுள்ளது.






இயற்கையைக் காக்கும் தொழில்நுட்பம்
பிள்ளைகளின் விருப்பத்துக்கேற்ப அவர்களின் அறைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மகளின் அறையருகே படிக்கவும் தியானம் செய்யவும் சிறிய தோட்டம் உள்ளது. இரண்டாம் தளத்தின் பெரிய அறையை ஹோம் தியேட்டராகவோ, மீட்டிங் ஹாலாகவோ, டான்ஸ் ஹாலாகவோ பயன்படுத்தலாம். மாடியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையை ரசிக்கலாம்.
வீட்டின் மின்சாரம், தண்ணீர் பயன்பாட்டைக் கண்காணிக்கும் ஆட்டோமேஷன் வசதி உள்ளது. சுமார் 13 கிலோவாட் உற்பத்தி செய்யும் சோலார் பேனலும், மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் மறுபயன்பாட்டு அமைப்புகளும் உள்ளன. எதிர்காலத்திலும் பொருந்தும் வகையில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல விஷயங்கள் இந்த வீட்டில் உள்ளது. முழுமையான கட்டுரையை படிக்க... வீடு ஒரு கனவு 4 - தொழில்நுட்பமும் இயற்கையும் இணையும் வீடு!


















