செய்திகள் :

'தோழியை சந்திக்க வந்த இடத்தில்.!' கோயம்பேடு தனியார் பார் தகராறு; மற்றொரு பெண்ணும் உயிரிழப்பு

post image

கடந்த மே 31-ம் தேதி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில், நடனமாடும் போது இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் மற்றும் அவரது தோழிகளுக்கும், சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அதனால், அந்த இரு குழுக்களையும் பவுன்சர்கள் வெளியேற்றியுள்ளனர். பாருக்கு வெளியேயும் அந்தப் பிரச்னை தொடர, அங்கிருந்தும் அந்த இரு குழுக்களையும் பவுன்சர்கள் அனுப்பியிருக்கின்றனர்.

ஆனால், போகும் வழியில், பைக்கில் சென்றுகொண்டிருந்த இளம் பெண் மற்றும் அவரது தோழியை சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களும் காரில் மோதியுள்ளனர்.

மதுபான பார்
மதுபான பார்

இதில் சம்பவ இடத்திலேயே இறந்தார் 18 வயதான இளம் பெண் யான்சி. யான்சி உடன் பைக்கில் சென்ற தோழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், அவரும் சிகிச்சைக்குப் பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேரை காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த யான்சிக்கு வயது 18. அவரின் தோழிக்கு வயது 17.

விழுப்புரத்தில் உள்ள அனிச்சங்குப்பம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் யான்சி. இவருக்கும், 17 வயதான சிறுமிக்கும் சில மாதங்களுக்கு முன்பு தான் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை சந்திக்க யான்சி வந்த இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க