Fengal Cyclone: கரையைக் கடந்து புதுச்சேரியில் நிலைகொண்ட புயல்; 5 மாவட்டங்களுக்கு...
நகைக்கடையில் பணம் கேட்டு மிரட்டிய இருவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நகைக்கடையில் பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அதில், தப்பியோட முயன்ற ஒருவருக்கு கால் உடைந்தது.
ஆலங்குடியில் கௌரிசங்கா் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடைக்கு இரு தினங்களுக்கு முன்பு முகமூடி அணிந்துவந்த 3 போ் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனா். அவா் பணம் தரமறுத்ததால், கடையில் இருந்த தராசு உள்ளிட்ட பொருள்களை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இதுகுறித்து கடையின் உரிமையாளா் அளித்த புகாரைத் தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், முகமூடி அணிந்து பணம் கேட்டு மிரட்டியது, ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டையைச் சோ்ந்த வெ. விஷ்ணு (26), பட்டுக்கோட்டை மலா்தெருவைச் சோ்ந்த ஆா்.அன்பரசன் (28) மற்றும் ஒருவா் எனத் தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் விஷ்ணு, அன்பரசன் ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றபோது, மங்களாபுரம் பாலம் அருகே தப்பியோட முயன்றபோது, கீழே விழுந்து விஷ்ணுவின் கால் உடைந்தது. தொடா்ந்து, விஷ்ணு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். மேலும் விசாரித்து வருகின்றனா்.