செய்திகள் :

'நல்ல கேள்வி.. அடுத்த கேள்வி! - டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறித்து RTI-யில் கிடைத்த விநோத பதில்!

post image

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எத்தனை? அவற்றில் பள்ளி, கல்லூரிகளின் அருகிருந்த கடைகள் எத்தனை? அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டிருக்கின்றன? போன்ற தகவல்களை சமூக ஆர்வலர் ஒருவர் RTI மூலம் டாஸ்மாக் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு டாஸ்மாக் நிறுவனம் கொடுத்திருக்கும் பதில் வினோதமாகவும் அதிர்ச்சியளிக்கும் வகையிலும் இருக்கிறது.

 டாஸ்மாக்
டாஸ்மாக்

காசிமாயன் என்கிற சமூக ஆர்வலர் கடந்த மாதம் மே 19 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனத்திடம் சில தகவல்களை கேட்டு RTI பதிவு செய்திருக்கிறது செய்திருக்கிறார். அதற்கான பதிலை டாஸ்மாக் நிறுவனம் இப்போது கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன? என ஒரு தகவலை காசி மாயன் கேட்டிருக்கிறார். அதற்கு ``கோப்பு நிலுவையில் உள்ளது தகவல் வழங்க இயலாது" என டாஸ்மாக் நிறுவனம் பதில் கூறியிருக்கிறது.

அதற்கு அடுத்ததாக, `பள்ளி, கல்லூரி, கோவில்களின் அருகே எத்தனை கடைகள் கண்டறியப்பட்டன?

அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டன அந்த கடைகளுடைய நம்பர் என்ன?

அந்தக் கடைகளில் எத்தனை பணியாளர்கள் பணியில் இருந்தனர்?

அவர்களுக்கு எங்கே மாற்றுப்பணி வழங்கப்பட்டிருக்கிறது?' போன்ற தகவல்களையும் கேட்டிருந்தார். ஆனால், டாஸ்மாக் நிறுவனம் வினோதமாக 'கேள்வி 1 க்கு கூறிய பதிலே இதற்கும் பொருந்தும்' என 'கோப்பு நிலுவையில் உள்ளது' என்கிற பதிலையே அத்தனை கேள்விகளுக்கும் மேற்கோள் காட்டியிருக்கிறது.

அதாவது, 'நல்ல கேள்வி...அடுத்த கேள்வி...' என சினிமா காமெடி பாணியில் பதில் கூறியிருக்கிறார்கள்.

காசி மாயன்
காசி மாயன்

'டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என முதல்வர் அறிவுப்பு வெளியிடுகிறார். ஆனால், தமிழகத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. அவற்றில் மூடப்பட்ட கடைகள் எத்தனை? போன்ற அடிப்படையான தகவலை கூட டாஸ்மாக் நிறுவனம் வழங்க மறுக்கிறது. இது டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையே இல்லையோ என்கிற கேள்வியையும் எழுப்புகிறது' என்கிறார் ஆர்.டி.ஐ போட்ட சமூக ஆர்வலர் காசி மாயன்.

எத்தனை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன என்பது ஒரு அடிப்படையான தகவல். அதைக் கூட வெளியில் கூற மறுப்பதன் மர்மம் என்னவென்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்

நிதி அயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி! – `மக்களுக்கான துரோகம்’ எனச் சாடும் நாராயணசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. இந்த... மேலும் பார்க்க

அறிவிக்கப்படாத மின்வெட்டு: 'மக்கள் கேட்கும் கேள்வி இதுதான்' - எடப்பாடி பழனிசாமி!

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து மின்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன என்கிற குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தினம் ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது. இந்த நில... மேலும் பார்க்க

``KG படிக்கும் குழந்தை பேசுவதைப் போல..." - திமுக-வை சாடும் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்!

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தவெக அரசால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் மேலிடப் பொருப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சென்னை தி.நகரில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் இல்லத்துக்கு சென்றிருந்தார். அங... மேலும் பார்க்க

`தளபதி படம் பார்ப்பீங்களா?’ - அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்து ரீல்ஸ் போட்ட தவெக நிர்வாகி!

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் பத்துக்கும் மேற்பட்ட தன்னுடைய ஆதரவாளர்க... மேலும் பார்க்க

`Reels எடுத்து Post செய்ய தான் சிங்கப்பெண் பிரிவா? தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுங்கள்'- உதயநிதி

ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா?' டு 'எனக்கு எந்த அதிகாரமும் இல்லங்க' தவிக்கும் மாண்புமிகு! | கழுகார்

பதக்கத்தால் வெடிக்கும் பஞ்சாயத்து!'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா..'தமிழக காவல்துறை பணியில் பத்து ஆண்டுகள் நிறைவு செய்து, எந்தவித தண்டனையும் பெறாமல் தூய பணிக் காலத்தை கொண்ட காவல் அதிகாரிகளுக்கு, முதல்வர்... மேலும் பார்க்க